தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!!

சனி மே 21, 2022

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேறியுள்ளது.
 
பிரதேச சபையின் அமர்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சபை அமர்வின்போது மேற்படி பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய உறுப்பினர் திருமதி ச.சுபாஜினி, இப்படுகொலைக்கு தானும் ஒரு சாட்சி என எடுத்துரைத்தார்.

இதனை அடுத்து தவிசாளர் உட்பட பலர் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.
அதன்படி குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதாகவும் ஏனைய சபைகளும் இத்தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் தவிசாளர் கேட்டுக்கொண்டார்.

இந்த விவாதத்தின்போது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறிச் சென்றிருந்தனர்.