தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் தமிழீழ மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது

வெள்ளி நவம்பர் 27, 2020

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள அலுவலகத்தின் தமிழீழ மாவீரர் தினம் மிக எளிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

m.

சிங்கள படைகளின் அச்சுறுத்தல்கள்;;, புலனாய்வாளர்களின் தீவிர மோப்ப நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். சரியாக 6.05 இற்கு மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. 

bv

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். 

lkl

கடந்த வருடங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் கோப்பாய் மாதிரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தமது உறவுகளுக்கு வணக்கம் செலுத்தின அவர்களை நினைவுகூர்ந்தனர். 

j

ஆனால், சிங்கள நீதிமன்று இவ்வருடம் பொது இடத்தில் மாவீரர் தினத்திற்கு அனுமதி மறுத்திருந்த நிலையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தமது அலுவலகத்தில் எளிமையாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.