தமிழ்த் தேசியத்துக்கான வாக்கு வங்கி உடையப் போகின்றது

சனி ஜூலை 11, 2020

தமிழ் தேசியத்திற்கான வாக்குவங்கி உடைவதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது. சைக்கிள் சின்னத்துக்கும், மீன் சீன்னத்துக்கும் வாக்குகள் பிரிந்து செல்லப் போகின்றன.

 நெற்றியில் பட்டையை போட்டு, பொட்டை வைத்துக் கொண்டு முன்னாள் வடக்கு முதலமைச்சர் மீனுக்கு வாக்களிக்குமாறு சொல்கின்றாரே என்பது கவலையளிக்கிறது என வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ஈ.பி.டி.பி. பிரமுகருமான தவராசா தெரிவித்தார்.

 யாழ் ஊடக மன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

 ;மழைக்காலத்தில் ஈசல்கள் வருவதைப் போல தேர்தல் காலங்களில் புதிய வேட்பாளர்கள் வந்துள்ளனர். அவர்கள் தமது பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். யுத்தம் முடிவடைந்த காலத்தில் இருந்து இன்று வரை கூட்ட்டமைப்பு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கியது. குறிப்பிட்ட காலத்துக்குகள் அரசியல் தீர்வு என்றார்கள். பின்னர் தீர்வு கிடைக்காது விட்டால் போராட்டம் வெடிக்கும் என்றார்கள்.

 2011 இல் இருந்து சர்வதேசத்துக்கு எங்களின் பிரச்சினைகளை எடுத்துச் சொல்ல எங்களுக்கு வாக்களியுங்கள் என்றார்கள். இதுவரை எமது பிரச்சினைகளை சர்வதேசத்துக்குச் சொன்னார்களா என்று கூடத் தெரியவில்லை.