தமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும்!

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

அண்டை மாநிலங்களோடு பகையை உண்டாக்கக் கூடிய வகையில் இன்றைய தமிழ்தேசிய கருத்தியல் கட்டமைக்கபடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருமாவளவன் மேலும் கூறியுள்ளதாவது, “திராவிட அரசியல் பெரியாரில் இருந்து தொடங்கியதாக இன்றைய அரசியல் கூறுகிறது.

ஆனால் ஆரியம், திராவிடம் என்ற சொல் பெரியாருக்கு முன்பே இரட்டை மலை சீனிவாசனால் உச்சரிக்கப்பட்டதாக கூறினர்.இரட்டை மலை சீனிவாசன் பற்றி திராவிட இயக்கங்கள் இருட்டடிப்பு செய்துவிட்டது என்று கூறுவதை விட, அவரைப்பற்றி இத்தனை ஆண்டுகள் தலித் அமைப்புகள், தலைவர்கள் ஏன் பொதுதளத்திற்கு கொண்டு சேர்க்கவில்லை என்பதை சுய மதிப்பீடு செய்ய வேண்டும்.

திராவிடம் என்பது சாதியத்தை கடந்தது. இன்றைய காலகட்டத்தில் தமிழ்தேசியம் அண்டை மாநிலங்களோடு பகையை உருவாக்கும் வகையில் கட்டமைக்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.