தம்பி கிட்டு தமிழினத்தின் ஆகச்சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். 

சனி ஜூன் 26, 2021

தன்னின அடக்கு - ஒடுக்குமுறைக்கும், அரச பயங்கரவாதத்திற்க்கும் எதிராக முப்படையும் கட்டி போரிட்ட ஒரு மாவீரனின் ஆரம்ப கால வரலாற்றை ஒட்டி பதிவு செய்யப்பட்டுள்ள சிறப்புமிக்க வரலாற்று ஆவணம் 'மேதகு' 

தம்பி கிட்டு தமிழினத்தின் ஆகச்சிறந்த திரைக் கலைஞர்களில் ஒருவர். 
ஒரு நிமிடத்திற்குள் அரசியலை பார்வையாளர்களுக்கு கடத்தும்  வகையில்  அவர் எடுத்த அரசியல் குறும்படங்கள் அத்தனையும் அட்டகாசமானது. அந்த படங்களின் ரசிகன் நான்.
அந்த வகையில் மேதகு என்ற படத்தை ஊர் கூடி தேர் இழுப்பதுபோல் உலகெங்கும் வாழும் தமிழர்களின் பங்களிப்புடன்  இயக்கியிருக்கிறார். 

m

பேமிலி மேன் , ஜகமே தந்திரம் போன்ற குப்பைகளுக்கு கிடைக்கும் அனுமதி மேதகுகளுக்கு கிடைப்பதில்லை.

பல்வேறு தடைகள் மற்றும் போராட்டங்களுக்கு நடுவில் இன்று மேதகு படம்  bsvalue என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது..  நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்க்கவும்..

ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்திற்கான முதல் புள்ளியாக ஒரு நியாயம் இருக்கும்.  அப்படியொரு நியாயத்தை மேதகு படம் பதிவு செய்திருக்கிறது. 

ஒற்றை துப்பாக்கியில் ஆரம்பித்த பயணம் ஒரு பெரும் சாம்ராஜ்யமாக விரிவடைந்தது நினைத்து பார்த்தால் பெரும் மலைப்பாக இருக்கிறது.

அந்த வீர வரலாற்றினை பதிவு செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.. அதில் ஒரு சிறு துளியை தனக்கு தெரிந்த திரைமொழியில் மேதகுவாக பதிவு செய்திருக்கிறார் கிட்டு.

பொருளாதார நெருக்கடி இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக எடுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்..

கிடைத்த குறைந்த தொகையில்  சொல்ல வந்த நியாயத்தை மேதகு மிகச்சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறது. 

இதுபோல்,  நல்ல நிதி பின்புலத்துடன்,  வீரம் நிறைந்த தமிழ் இனத்தின் விடுதலையை பதிவு செய்யும் திரைக்காவியங்கள் அடுத்தடுத்து வர வேண்டும்.. 

அந்த தொடர் ஓட்டத்திற்கான  முதல்  ஒலிம்பிக் ஜோதியை இயக்குனர் கிட்டு குழுவினர் மேதகு படம் மூலம் ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்..