தந்­தையின் தியா­கத்­திற்கு ஈடு இணை எதுவும் இல்லை!

ஞாயிறு ஜூன் 16, 2019

தன்­ன­ல­மற்ற தியா­கத்­தோடு பிள்­ளை­களை வளர்க்க பாடு­பட்ட தந்­தைக்கு, அவர்கள் பெற்­றெ­டுத்த பிள்­ளைகள் நன்றி செலுத்தும் நாள் தான் தந்­தையர் தினம் (Father's Day). உலகம் முழு­வதும் இந்த தினம் ஒவ்­வொரு ஆண்டும் ஜூன் 3 ஆவது ஞாயிற்றுக் கிழ­மை­களில் நன்றி பெருக்­குடன் கொண்­டா­டப்­ப­டு­கி­றது.

பெற்ற தாயின் அன்­புக்கு ஈடு இணை எதுவும் இல்லை என்­பது உண்­மைதான்.அதே நேரத்தில்,  தந்­தையின் தியா­கத்­தையும் எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்­வொரு தந்­தையும்,தனது பிள்­ளைகள் நன்­றாக இருக்க வேண்டும் என்­ப­தற்­காக கடி­ன­மாக உழைத்து பொருள் ஈட்டி, வாழ்வில் தன்­ன­ல­மற்ற பல தியா­கங்­களை செய்து பிள்­ளை­களை நல்ல நிலைக்கு கொண்டு வரு­கி­றார்கள்.

அப்­ப­டி­பட்ட, தந்­தைக்கு பிள்­ளைகள் நன்றி தெரி­விக்கும் நாள்தான் தந்­தையர் தினம். இந்த தந்­தையர் தினத்தை கொண்­டா­டு­வ­தற்கு முதலில் வித்­திட்­டவர் டோட் என்ற ஒரு அமெ­ரிக்க பெண்தான்.

வொஷிங்டன் நக­ருக்கு அருகே உள்ள ஸ்போக்கேன் என்ற ஊரைச் சேர்ந்த சோனோ­ராவின் தந்தை வில்­லியம் ஜெக்சன் ஸ்மார்ட்.இவ­ரது தாய், தனது 6-ஆவது பிர­ச­வத்தின் போது மர­ண­ம­டைந்தார். அப்­போது, சோனோ­ரா­விற்கு வயது 16. ஆனால், ஜெக்சன் ஸ்மார்ட்,தம் குழந்­தை­க­ளுக்கு தாய்ப்­பாசம் ஏக்கம் வந்து  விடா­த­ப­டிக்கு, ஒரு தந்­தை­யாக மட்­டு­மல்­லாது, தாயு­மாகி 6 பிள்­ளை­க­ளையும்  நின்று வளர்த்­தெ­டுத்தார். 

 தனது தந்­தையின் இந்த பாசமும்,நேசமும் சோனோ­ராவை அவர் வளர்ந்த பின்னர் நெகிழச் செய்து,அவ­ரது தந்தை குறித்த பெரு­மிதம் கொள்ள வைத்­தது. இந் நிலை­யில்தான்,1909 ஆம் ஆண்டில் தனது 27 ஆவது வயதில், அன்­னையர் தினத்­தன்று ஒரு கிறிஸ்­தவ தேவா­ல­யத்­திற்கு சென்றார். அங்கு, பாதி­ரியார் ஒருவர் அருள் உரை கூறிக் கொண்­டி­ருந்தார்.

அதை பார்த்த சோனோ­ரா­வுக்கு, "ஒரு குழந்­தையின் வாழ்வில் அன்­னையின் பங்கு எவ்­வ­ளவு இருக்­கி­றதோ, அதே போல தந்­தையின் பங்கும் இருக்கும் போது, ஏன் தந்­தையர் தினம் கொண்­டாடக் கூடாது?" என்ற எண்ணம் உதித்­தது.

அந்த எண்ணம் உதித்த கையோடு, சோனோரோ தந்­தையர் தினத்தை கொண்­டாடத் தொடங்­கினார். அதன் பின்னர், இது உலகம் முழு­வதும் பர­வி­யது.

1924- ஆம் ஆண்டு அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால்வின் கூலிட்ஜ், முதல் முதலில் தந்­தையர் தினத்தை அங்­கீ­க­ரித்தார். பின்னர், 1972-ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தி­யாக இருந்த ரிச்­சர்டு நிக்சன் என்­பவர், ஒவ்­வொரு ஆண்டும் ஜூன் மாதம் 3- ஆவது ஞாயிற்­றுக்­கி­ழமை 'தந்­தையர் தினம்' கொண்­டா­டு­வதை உறு­திப்­ப­டுத்­தினார்.  

அப்­போ­தி­ருந்து, உலகம் முழு­வதும் தந்­தையர் தினம் கொண்­டாடும் முறை வேக­மாக பர­வி­யது.   

பத்து மாதம் சுமக்க முடி­ய­வில்லை என்­பதால், அதற்கு எல்லாம் சேர்த்து வைத்­துதான் தந்­தை­யா­னவர், தம்மால் இயலும் வரை தோளிலும் முது­கிலும் சுமக்­கிறார் என்றால் மிகை இல்லை. இந்த நாளில் ஒவ்­வொரு குழந்­தையும், தங்­களின் முன்­னேற்­றத்­திற்கு தந்தை பட்­ட­பாடு, தியா­கத்தை நினைக்க வேண்டும்.முடிந்த பரிசு பொருளை தந்­தைக்கு கொடுத்து நன்றி பாராட்­டுங்கள்! 

  அதை­விட,"அப்பா நான் உங்­களை அதிகம் நேசிக்­கிறேன்!" என்ற நன்றி பெருக்­கான அன்பு கலந்த வார்த்­தையை சொல்­லுங்கள்.அல்­லது அதை அழ­காக எழுதி வாழ்த்து அட்­டை­யாக கொடுங்கள்..!

தந்­தையின் அன்பு கிடைக்­காமல் போவது, அன்­னையின் அன்பைப் போலவே குழந்­தையின் ஆளுமை,நடத்­தையின் வளர்ச்­சியில் அதிக பங்­காற்­று­கி­றது என்­கி­றார்கள் ஆராய்ச்­சி­யா­ளர்கள்

அன்­னையின் வயிற்றில் ஐந்­தி­ரண்டு மாதங்­களாய் நம்மை சுமந்­தாலும், ஆயுள் வரை நெஞ்சில் சுமப்­பவர் தந்தை. அம்­மாக்­களை போல, அப்­பாக்­க­ளுக்கு பாசத்தை வெளிக்­காட்டத் தெரி­யாது. 

முள்­ளுக்குள் ரோஜாவாய், பலாப்­ப­ழத்தில் பலாச்­சு­ளையாய் நினைக்க, நினைக்க நெஞ்­சுக்குள் சந்­தோ­ஷமும், பெரு­மையும் தரு­பவர். வாழ்க்கைச் சக்­க­ரத்தில் வச­தியாய் நாம் வாழ்­வ­தற்­காக, ஓயாமல் சுழலும் அன்புச் சக்­கரம் தந்தை. "நான் பட்ட கஷ்டம்', என் பிள்­ளையும் படக்­கூ­டாது என்று வாயாற பேசி, மன­மார உழைக்கும் அந்த அன்பு... "கண்­ணுக்கு தெரி­யாத கட­வுளைப் போல', நம்மை அர­வ­ணைத்து காக்கும். தந்­தையின் பெரு­மை­களை மனதால் உணரும் போதுதான், அவரது அன்பு நம் கண்ணுக்குத் தெரியும். இன்று தந்தையர் தினம். இந் நாளின் ஒவ்வொரு மணித்துளியிலும் தந்தையின் உழைப்பை நினைவு கூர்வோம், புரிந்து கொள்ள முயற்சிப்போம். "தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்ற வாக்கை, வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்வோம். 

Share