தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்

செவ்வாய் அக்டோபர் 27, 2020

  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறுவோர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என காவல் துறை  ஊடகப் பேச்சாளர், பிரதி காவல் துறை  மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு முன்னால் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இத ற்கு மேலதிகமாக காவல் துறை  விசேட உத்தரவு அடங் கிய ஸ்டிக்கர் இன்று முதல் காட்சிக்கு வைக்கப்படும் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் காவல் துறையால்  விடுக்கப்பட்ட சட்ட விதி முறைகளை மீறினால் அவர்களின் அசையா மற்றும் அசையும் சொத் துக்கள் முடக்கப்படும் என அஜித் ரோஹாண ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.