தனியார் காணிகளை காவல்துறை நிலையத்திற்காக சுவீகரிக்க முயற்சி-மானிப்பாய்

சனி மார்ச் 16, 2019

மானிப்பாயில் காவல்நிலையம் அமைக்கவென ஆறு தனி நபர்களுக்கு சொந்தமான 16 பரப்பு விஸ்திரணம் கொண்ட காணிகளை சுவீகரிப்பதற்கான அறிவித்தல் காணி உரிமையாளர்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மானிப்பாய் காவல் நிலையத்தை சூழவுள்ள தனியாருக்கு சொந்தமான உறுதி காணிகளை கடந்த 24 வருடத்திற்கு மேலாக கையகப்படுத்தி வைத்துள்ள காவல்துறையினர் அக் காணிகளை தமது பயன்பாட்டிற்காக நிரந்தரமாக கையகப்படுத்த காணி சுவீகரிப்பு சட்டத்தின் ஊடாக முதலாவது அறிவித்தல் காணி உரிமையார்களுக்கு பிரதேச செயலகம் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்த அறிவித்தலுக்கு காணி உரிமையாளர்கள் காணிகளை காவல்துறையினருக்கு வழங்க தமக்கு இணக்கமோ,சம்மதமோ இல்லை என பிரதேச செயலருக்கு எழுத்தில் பதில் அனுப்பி வைத்துள்ளனர்.