தனியார் பேருந்து உரிமையாளர்கள் புதிய போக்குவரத்து நெறிமுறைக்கு பரிந்துரைப்பு

சனி ஜூலை 31, 2021

திறமையான பொதுப் போக்குவரத்து திட்டத்தை உறுதி செய்ய விஷேட திட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

30 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையின் நகலை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் அவ்வாறு தடுப்பூசி செலுத்தாதோரிடம் இரட்டிப்பு கட்டணம் அறவிடப்படும் என அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

சொகுசு பேருந்துகளில் அதே நெறிமுறை பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித் தார்.

இது தொடர்பிலான முன்மொழிவானது ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் நாளை சமர்ப்பிக்கப்படும் என்றும், அது அங்கீகரிக்கப்பட்டால் திங்கட்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் கெமுனு விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.