தனியார் துறையினரின் முறைப்பாடுகளுக்கு விரைவில் தீர்வு

சனி நவம்பர் 21, 2020

 தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில் தனியார் துறை தொழிலாளர்களினால் முன்வைக்கப்படும் முறைப் பாடுகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர தொழில் திணைக்களம் விசேட வேலைத் திட்டம் ஒன்றை ஆரம் பித்துள்ளது.

மாவட்ட செயலாளர் அலுவலகங்களினூடாக குற்றச் சாட்டுகள் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி தெரிவித்தார்.

தொழிலாளர் திணைக்களம் தனியார் துறை முதலாளி களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பாக சிறப்பு அறி வுறுத்தல்களை வெளியிட்டுள்ளது என தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

கிடைத்த பெற்ற முறைப்பாடுகளில் சம்பளம் வழங்கப் படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சம்பள பிரச்சினை தொடர்பில் தனியார் துறை நிறுவன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் கோவை அனுப்பப்பட்டுள்ளதாக தொழில் திணைக் களத்தின் பணிப்பாளர் பிரபாத் சந்த்ரகீர்த்தி மேலும் தெரிவித்துள்ளார்.