தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்யவுள்ள பெண்!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை விட 40 வயது அதிகமான நபரை திருமணம் செய்ய உள்ளார்.  அவுஸ்திரேலியாவை சேர்ந்த ரேச்சல் ராபர்ட்ஸ் என்கிற 33 வயது பெண் கடந்த நான்கு வருடங்களுக்கு முன், தன்னுடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள பேருந்து நிலையத்தில், முதன்முறையாக நெவ் மெக்டெர்மொட் (73) என்பவரை சந்தித்துள்ளார்.

 முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்ததால் ரேச்சல், நடக்க முடியாமல் திணறுவதை பார்த்த மெக்டெர்மொட், அவருக்கு தன்னுடைய காரில் லிப்ட் கொடுத்துள்ளார். அந்த முதல் அறிமுகத்தில் இருவரும் பல விடயங்களை பற்றி பேசி மகிழ்ந்துள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்து ரேச்சலின் தந்தை இறந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பம் தனிமையில் சோகமாக இருப்பதை பார்த்த மெக்டெர்மொட் தினமும் வீட்டிற்கு சென்று ஆறுதல் கொடுத்து வந்துள்ளார்.

 அவர் கொடுத்த அந்த பாசம், ரேச்சலிற்கு காதலாகி மாறியுள்ளது. அவர்களுடைய காதலுக்கு குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, தற்போது இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.