தந்தை பெரியார் 142 ஆவது பிறந்தநாள்

வியாழன் செப்டம்பர் 17, 2020

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 142 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தலைமை நிலையம் தாயகத்தில் அமைந்துள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார்.

இந்நிகழ்வில் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட கழக  நிர்வாகிகள் பெருமளவில் கலந்துகொண்டனர்.