தண்டனைக்கு விரைவில் தடை!

புதன் செப்டம்பர் 11, 2019

பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகளை தடை செய்வதற்கு தேவையான சட்டமுறைகள் விரைவில் கொண்டுவரப்படும் என, நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

சட்டங்களை மக்கள் அறிந்துகொள்ளாமை காரணமாக சமூகமானது பாரிய  பின்னடைவை சந்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலாங்கொடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போது, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.