தனுஷ்கோடியில் வயதான தம்பதியர் மயங்கிய நிலையில் மீட்பு!!

திங்கள் ஜூன் 27, 2022

இன்று காலை தனுஷ்கோடியில் வயதான தம்பதியர் மயங்கிக் கிடந்துள்ளனர்.குறித்த தம்பதியினர் திருகோணமலையில் இருந்து தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தம்பதியை மீட்டு அம்புலன்சில் ராமேஸ்வரம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து ராமேஸ்வரம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் இதுவரை 85க்கும் மேற்பட்டோர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.