டோகா கத்தாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

திங்கள் மே 20, 2019

டோகா கத்தாரில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் செந்தமிழர் பாசறையின் அனுசரணையுடன் தமிழர் கலை அறிவியல் பேரவையால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மே 18 மாலை 07 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமானது.

பின்னர் அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் தமிழர் கலை அறிவியல் பேரவை, செந்தமிழர் பாசறை கத்தார், மறத்தமிழர் பேரவை உறவுகள் கலந்து கொண்டனர்.