டோக்கியோ ஒலிம்பிக் - அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

வெள்ளி ஜூலை 30, 2021

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த பி.வி. சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

 ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பெண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் காலிறுதி தகுதிச் சுற்றில்  21-15, 21-13 என்ற செட் கணக்கில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து டென்மார்க்கின் மியா பிளிச்பெல்ட்டை வென்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
 
இன்று இந்தியா வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பான் வீராங்கனை அகனே யமகுச்சியை இடையேயான காலிறுதி ஆட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில் யமகுச்சியை 21-13, 22-20 என்ற நேர் செட் கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் ஒலிம்பிக் ஒற்றையர் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பி.வி.சிந்து சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதி சுற்றில் சீனாவின் சென்யூபையை உடன் மோதுகிறார்.