தோலின் மீது காத்திருக்கும் கொரோனா!

ஞாயிறு அக்டோபர் 11, 2020

நம் தோலின் மேற்பரப்பு மீது கொரோனா வைரசால், 9 மணி நேரம் வரை உயிர்ப்புடன் இருக்க முடியும் என, ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே,கைப்பிடி,மேசை,இருக்கை போன்ற பலரும் பயன்படுத்தும் பொருட்களின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ்களால் பல மணி நேரங்கள் வரை உயிர்ப்புடன் இருக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அண்மையில், 'கிளினிகல் இன்பெக்சியஸ் டிசீசஸ்' இதழ் ஒரு ஆய்வை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வின்படி, மனித தோல் பரப்பில் கொரோனா வைரசால், 9 மணி நேரம் வரை தொற்று ஏற்படுத்தும் திறனுடன் இருக்க முடியும் என்று தெரிவித்துள்ளது.

இந்தக் கட்டத்தில், யாருடைய தோலின் மீது கொரோனா இருக்கிறதோ, அவருடைய உடலுக்குள் சென்றோ அல்லது அவரைத் தொடுபவருக்கோ தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

எனவே, இப்போதும், கைகளை சோப்பால் அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருப்பது மிக அவசியமாகிறது என, ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.