தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

வியாழன் மார்ச் 14, 2019

தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கம் இன்று நாடளாவிய ரீதியல் நடத்த திட்டமிட்டிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது. 

சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் தபால் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி தபால் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு இரண்டு வார காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கு உரிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளனர்.