“தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள்

செவ்வாய் சனவரி 14, 2020

திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் மடடக்களப்பு “தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள் வழங்கபட்டன.

திருகோணமலை ரோட்டரி கழகத்தினால் மடடக்களப்பு “தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை”க்கு கற்றல் உபகரணங்கள் 12-01-2020 அன்று வழங்கி வைக்கப் பட்டது.     

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் உறுப்பினர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் 

“தரிசனம் விழிப் புலனற்றோர் பாடசாலை” தலைவர் திரு. அ. ரவீந்திரன் தலைமையில் பிரதம விருந்தினராக திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன்  கலந்து கொண்டு ரூபா எட்டரை (8 ½) இலட்சத்துக்கு மேற்படட பெறுமதியுள்ள பிரெய்ல் உபகரணங்கள் வழங்கி வைக்கப் பட்டது.

இதற்குரிய நிதி உதவியை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நலன் விரும்பி ஒருவர் கொடுத்து உதவினார்