தற்கொலைக்கு முயற்சித்த சிறைச்சாலையில் கைதி சிகிச்சை பயனின்றி வைத்தியசாலையில் பலி!!

வியாழன் ஏப்ரல் 08, 2021

பதுளை சிறைச்சாலையில் கைதி ஒருவர்,சுருக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று, இன்று இடம்பெற்றுள்ளது.கழுத்தில் சுருக்கிட்டு தொங்கிய நிலையிலிருந்த கைதியை, சிறைக் காவலர்கள் மீட்டு, பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டப் போதிலும், சிகிச்சை பயனின்றி, உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பதுளை கலுகல்பிட்டிய என்ற இடத்தைச் சேர்ந்த பிரமித் சானக்க என்ற 36 வயது நிரம்பிய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில், பதுளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்ட இவர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.