தற்கொடையின் முதல் வித்து விதையான மாதம்!

வெள்ளி ஜூலை 05, 2019

யூலை மாதம் இம்முறையும் வந்துள்ளது.

வழக்கம்போல் வந்துபோகும் மாதமா? யூலை மாதம்?

இம்மாதம் தானே ஈழத்தமிழர்களின் இதயங்களை தீக்கு இரையாக்கிய மாதம்,

ஈனர்களை இவ்வுலகுக்கு அடையாளம் காட்டிய மாதம்,

ஈழத்தமிழர்கள் தலை நிமிர்ந்த மாதம்,

தற்கொடையின் முதல் வித்து விதையான மாதம்,

சிங்களத்தில் சிகரத்தில் எறி அடித்த மாதம்,

யூலை என்றாலே சிங்களம் விடுமுறையே இல்லாமல் விழித்திருந்து வாங்கி கட்டிய மாதம்,

சோகமும் பெருமையும் மிக்க மாதத்தில் தான் இம்முறையும் கரும்புலிகள் என்ற தற்கொடைளார்களின் நாளும் வருகின்றது.

இம்முறையும் சம்பிரதாய சடங்கு போல் நிகழ்வை நடத்தி முடித்து விட்டு அடுத்த கரும்புலிகள் நாளுக்காய் காத்திருக்கப்போகிறோம்?

கடலிலும் தரையிலும் வானிலும் எல்லைகள் தாண்டியும் சாதனை படைத்த பிள்ளைகளை எப்படி மறந்தோம் நாம்?

ஈனப்பிறவிகளாய் ஈழத்தமிழனால் மட்டும் தான் இருக்க முடியும், ஆணும் பெண்ணுமாக அவர்கள் எம் கண் முன்னே கந்தகக்காற்றில் கரைந்து போனதையும் கட்டித்தழுவி கை அசைத்து படகேறிப்போனதையும் எப்படி மறந்தோம் நாம்?

கண் முன்னே வந்து போகும் இந்தப்பிள்ளைகளின் முகங்களை எங்கே துலைத்தோம்?

ஒன்று இரண்டா மறந்து கடந்து போவதற்கு எண்ணும் போதெல்லாம் இதயத்தில் ஏதோ இனம்புரியாத வலி. இந்தவலியை எந்த மருந்தாலும் ஆற்ற முடியாது, கூட இருந்த தோழர்களையும் தோழியர்களையும் குழியிலே இறக்கி விடும்போது, அருகிலே எமக்கும் இடம் தாருங்கள் என்று சொன்னோமே, மிஞ்சி இருக்கும் நாம் என்ன செய்தோம் என்ன செய்கிறோம்,

தாயகத்தில் மேய்ப்பன் இல்லாத ஆடுகளாய் போனது எம்மினம்.

தினமும் கொலையும், கொள்ளையும், வல்லுறவும், சமூகச்சீர் அழிவும் நடக்க நாம் இதற்குள்ளே கிடந்து துலைய ஒரு மொழி பேசும் இனம் புட்டும் தேங்காய் பூவும் போல் இருப்பதாக சொல்லும் இஸ்லாமியர்கள் ஈழத்தமிழர்களை தமிழர்களின் தாயகத்தில் பெரும்பான்மை இல்லாமல் செய்வதற்கு மிகச்சிறப்பாக திட்டங்கள் தீட்டி இன அழிப்பு மூடிய திரைக்குள் செய்கிறார்கள்.

தமிழர் நிலங்களை சோரம்போன தமிழர்களை கொண்டே தம்வசம் ஆக்கும் வேலைகளை தமக்குள்ளே இருக்கும் கட்சி பேதங்களை மறந்து தமிழர்களின் தாயகமான வடக்கிலும் கிழக்கிலும் இஸ்லாமியர்கள் செய்கின்றார்கள், எம் வரலாற்றுத்தாயகம் இன்று இந்த மத வெறியர்களால் மெல்லமெல்ல மிக நேர்த்தியாக கையகப்படுத்தப்படுகிறது. இதை எவர் எதைக்கொண்டு தடுப்பர்?

தாயக நிலை இப்படி.....

புலம்பெயர் நிலையோ குழப்பங்களும், துரோகங்களும், காட்டிக்கொடுப்புக்களும், கூடவே இருந்து குழி பறிப்புக்களும்...

2009 இற்குப் பின்னர் புற்றீசல்கள் போல் இணையப்போராளிகள்....

எழுதிக்கிழித்தவர்கள், கிழிக்கின்றவர்கள், ஆய்வாளர்கள்...

2009 முன்னரும் பின்னரும் போராளிகள் என்று சொல்லிக்கொண்டு சிங்கள, இந்திய எயமானர்களின் ஏவலாளிகாய் இருந்து தேசியக்கட்டமைப்புக்களை சிதைத்து உண்மையாக செயற்பாட்டாளர்கள் மீது அவதூறு பரப்பி, சுட்டு படுகொலை செய்து, வெட்டி காயப்படுத்தி எல்லாவற்றையும் அழித்ததை தவிர இந்த ஒரு சில முன்னாள் போராளிகளால், நல்லவர்களையும் கொள்கையில் உறுதியாகவும் இருந்த இருக்கின்றவர்களை மன உளைச்சல் கொடுத்து அகற்றி கொள்கை இல்லாதவர்களையும் சோரம் போய் எதிரியின் கூடாரத்துக்குள் இருப்பவர்களையும் தேசிய சொத்துக்களை பதுக்கி தமது சுய நலனுக்கும் தம் சந்ததிக்கும் சொத்துச்சுகம் சேர்த்தவர்களையும் இப்போதும் சேர்ப்பவர்களையும் அரியணை எற்றி விட துடியாய் துடித்ததை புலம்பெயர் சமூகம் பார்த்தது , தம்க்குதாமே பட்டங்கள் சூட்டி போதாக்குறைக்கு 2009 க்கு முதல் வெளியே நின்று வேடிக்கை மட்டும் பார்த்தவர்களுக்கு மாமனிதர் நாட்டுப்பற்றாளர் பட்டங்கள் வேறு கொடுத்து தமக்குள்ளே மகிழ்ந்ததைத்தவிர,

2009 க்கு முதல் சமாதானக்காலத்தில் வன்னிக்கு படை எடுத்த புலம்பெயர் புத்துசீவிகள், மருத்துவர்கள் தமிழ் ( எல்லோரையும் சொல்லவில்லை  இன்றுவரை ஏதாவது செய்ய வேண்டும் என்று செய்கின்ற செய்ய நினைக்கின்ற எத்தனையோ பேரை தெரியும்  )ஈழத்தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனுடன் உணவு உண்டு படங்கள் எடுத்து தாம் அண்ணயுடன் கதைத்தோம் உணவு உண்டோம் படம் எடுத்தோ என்று படம் காட்டிய புண்ணியவான்கள் எங்கே ? 2009 இல் போரை நிறுத்த புலம்பெயர் மண்ணில் நடந்த போராட்டத்தில் தன் பிள்ளையை கரும்புலியாய் அனுப்புவேன் என்று  சொன்னவர் இன்று சிங்களத்தின் விருந்தாளி ,

புலம்யர் பெயர் மண்ணில் அண்ணைக்கு ( தலைவருக்கு ) படம் வைக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் 2009 க்கு பின்னர் அலையுது இந்தக்கூட்டம் யார் என்றால் 2002  இலே சிங்கள அமெரிக்க வலையில் வீழ்ந்த குமரன் பத்மனாதன் அவர்களின் விசுவாசிகள் இதில் வேடிக்கையும் வேதனையும் என்னவென்றால் சமாதான காலத்தில் தாயகம் போய் தளபதிகளையும் போராளிகளையும் சந்தித்து கதைத்து ஆயுதங்கள் அடிச்சுப்பார்த்து பொய் வாக்குறுதிகள் கொடுத்து விட்டு வந்த சிலர் தான் இப்போது கே பியின் முகவர்களாய் இருக்கிறார்கள் இதில் ஒருவர் ஊரை அடித்து உலையில் போடுவதில் வித்தகர் , இனொருவர் இயக்கம் என்றாலே என்ன என்று அறியாதவர் இப்போது இவர்தான் இயக்கத்தின் அனைத்து துறைக்கும் பொறுப்பாளர் மாதிரி இருக்குறார் கேபியின் பிரதான முகவர் இவர்தான் , இவரைத்தான் 2009 க்கு முதலும் பின்னரும் வந்த ஒரு சில முன்னாள் தளபதிகள் ( தளர்பதிகள் ) ஒருவருடம் இயக்கத்தில் இருந்ததுகள் எல்லையில் விட ஒடி வந்ததுகள் அண்ண அண்ண என்று கூப்பிட்டு திரியுதுகள் போட்டி நிகழ்வுகளை செய்வதற்கும் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி போராளிகள் என்றால் வன்முறையாளர்கள் குழப்பவாதிகள் என்றும் எண்ண வத்தவர்கள் தான் இந்த சுய நலவாதிகள் , 2009 பின்னர் புலம்பெயர் நாடுகளுக்கு வந்த ஏராளமான முன்னாள் போராளிகள் தாம் உண்டு தம் குடும்பம் என்று வாழ்கின்றார்கள் ( இதில் சிலர் பெரும் வர்த்தகள் வட்டிக்கு பணம் கொடுப்பவர்ள் பெரும் பணக்காறர்கள் மண்டபங்களின் உரிமையாளர்களாகவும் இருக்கின்றார்கள் )

2009 க்கு பின்னர் வந்தவர்களில் ஒருசிலர் புலம்பெயர் தேசங்களில் ஏற்கனவே நிதி மோசடி மற்றும் உள்ளக முரண்பாடுகளை ஏற்படுத்தி அதில் சுயலாபம் கட்டவர்களோடு சேர்ந்து நின்று கொண்டு குழப்பங்களையும் தேசியக்கட்டமைப்புக்களை சீர்குலைக்கும் பணியிலும் ஈடுபட்டார்கள் தொடர்ந்தும் ஈடுபடுகின்றார்கள் இவர்களே ( இவர்களில் பலர் போர் உச்சம் அடைவதுக்கு முதலே வந்து தம்மை நிலைப்படுத்தி மறைத்து இருந்தவர்கள் ) அண்மைக்காலமாக மாவீரர்களை உறுதிப்படுத்தி பட்டங்கள் கொடுத்து மதிப்பழிப்பதாக சொல்லுகின்றார்கள் , இவர்களுக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது என்று தெரியவில்லை , இவர்கள் தான் சொன்னார்கள் நாம் அண்ணையின் மூச்சுக்காற்று பட்டு வளந்தவைகள் அண்ணக்கு அருகில் இருந்தவர்கள் சாப்பாடு கொடுத்தவர்கள் மருந்து கொடுத்தவர்கள் நாங்கள் ஆமியிடம் சரன் அடையாமல் வந்தவர்கள் என்று இவர்களிடம் யாரவது கேளுங்கோவன் நீங்கள் வர ஆமிக்கு தெரியாமல் பாதை இருந்தது என்றால் அண்ணையை ஏன் கூட்டிக்கொண்டு வரவில்லை என்று , ஏன் எனில் தலைவரை பாதுகாக்கச்ச்சொல்லித்தான் இத்தனை கரும்புலிகளும் தம்மை தற்கொடை ஆக்குவதற்கு முன் சொன்னார்கள் அவர்களுக்குத்தெரியும் தலைவர் இல்லை எனில் இந்த இனத்துக்கு விடிவில்லை வாழ்வில்லை அடையாளம் இல்லாமல் அழிந்து போகும் தமிழ் இனம் என்று , அவர்களின் நினைவுகளை மீட்டு விழினீர் சொரிந்து சபதமெடுக்கும் நாளில் வந்து நிற்கின்றோம் ,

புலம்பெயர்ந்து இருக்கும் எம் உறவுகளின் உதிரக்கொடிகள் ஆற்றல் மிக்க சந்தியாகி  அனைத்து துறைகளிலும் திறமை பெற்று நிற்கின்ற இந்த நேரத்தில் இந்த இமாலய வளங்களை ஒருக்கிணைத்து அனைத்துலக ச்மூகத்திடம் நடந்த இனப்படுகொலைக்கும் தினம்தினம் நடக்கும் மண் பறிப்புக்கும் காணாமல் ஆக்கப்பட்ட சிறையில் வாடும் எம்முறவுகளுக்கான நீதியை தீர்வை கேட்பதற்கு வழியாய் உருவாக்க வேண்டியவர்கள் தமக்குள்ளெர் முட்டி மோதி கதிரைக்கனவோடும் இருக்கின்றார்கள் , புலத்தில் இருக்கும் தமிழ் தேசிய கட்டமைப்புக்களை கட்டுப்படுத்தும் அனைத்துலகம் தலைமைசெயலகம் போன்றவை ஆழுமைத்திறனுடன் இருக்கும் ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு  தொடர்ந்தும் தமிழர்களுக்கு துரோகம் செய்யுமா? ஓடத சைக்கிழுக்கு காத்து அடிச்சு விடுவதோடு சரி இந்த அனைத்துலக கட்டமைப்பின் வேலை அத்தோடு சரியாக இருப்பதை கெடுத்து தங்களுக்கு தாளம் போடக்கூடியவர்களை முன்னிலைபடுத்துவது தான் இவர்களின் வேலை , யானை தன்கையால் தனக்குத்தானே மண்ணைக்கொட்டும் அதைப்போல் தான் நாம் இன்று இருக்கின்றோம் , போராட சத்தி இருந்தும் வழங்கள் இருந்தும் அதை பயன் படுத்தாமல் கடமைக்கு சடங்குகள் போல் மாவீரர் நினைவுகளை செய்வதோடு காலம் களிக்க நினைக்கின்றோம் நாம் எந்தப்பிள்ளைகளின் தீயாகத்தை மூலதனமாக்கி புலம்பெயர் தேசங்களில் வாழ்கிறோமோ அந்தப்பிள்ளைகளின் ஈகம் வெல்ல உளைப்பது ஒன்றே தான் இந்தக்கரும்புலிகள் நாளில் நாம் செய்யும் வணக்கமாகும் , அதை விடுத்து விடுத்து துரோகம் செய்து காட்டிக்கொடுத்து சுய நலன் பேணி வாழ்ந்தோம் என்றால் வரலாறு எம்மை மன்னிக்காது ,

முன்னாள் போராளிகளே உங்களோடு நின்று களம் ஆடிய தோழர்களும் தோழியரும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வாருங்கள் அவர்களின் நினைவுகள் உங்களின் வருங்காலத்துக்கு வழிகாட்டும் உண்மையும் நேர்மையும் கொண்டு எம்மை வழி நடத்திய தலைவன் மீது உண்மையான பற்றும் பாசமும் இருக்கும் ஆனால் நீங்கள் பதவி சுகம் தேடாமல் மேய்ப்பர் இன்றி இந்த இனத்துக்கு வழி காட்டுங்கள் என்றும் மாவீரம் பொய்த்துப்போகாது தர்மமே வெல்லும் எம்மை என்றும் தாங்கும் தலைவன் வழி நின்று வெல்வோம் .

-வண்ணனிலவன்