ட்ரம்ப் முதுகெலும்பு இல்லாதவர்- தோல்வியடைந்த தலைவர்! நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர்-

செவ்வாய் சனவரி 12, 2021

அமெரிக்க நாடாளுமன்ற வன்முறைக்கு பொறுப்பேற்று டொனால்ட் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பிரதிநிதிகள் சபை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதற்குத் ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் "ஜோ பைடன்" வரும் 20ம் தேதி அதிபராகப் பொறுப்பேற்கிறார். அண்மையில் அவர் வெற்றியை உறுதி செய்யும் வகையில், நாடாளுமன்றத்தில் ஒரு நிகழ்வு நடந்தது, அந்நிகழ்வில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள், ஜோ பைடனின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், டிரம்ப் தன்னுடைய ஆதரவாளர்களை ஏவி விட்டு வன்முறையில் ஈடுபடச் செய்ததாக அங்கு கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

மேலும் இந்த வன்முறையை கண்டித்து, அனைத்து உலகத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். டிரம்பை பதவி நீக்கம் செய்ய அதிகாரம் வழங்கும் 25வது சட்டத்திருத்தத்தை சபையில் கொண்டு வரப்போவதாக ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரும், கலிபோர்னியா முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஸ்வாஸ்னேகர் கூறியதாவது:

அதிபர் டிரம்ப் ஜனநாயக வழியில் வந்த தேர்தல் முடிவுகளை தடுக்க முயன்றார்.பொய்களால் மக்களை வழி நடத்த திட்டம் தீட்டினார். நாஜிக்கள் யூதர்களுக்கு எதிராக வெறியாட்டம் நடத்தினர்.

அதே போல் கடந்த 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நாஜிகளுக்கு இணையான வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர்.

டிரம்ப் முதுகெலும்பு இல்லாதவர், தோல்வியடைந்த தலைவர், அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்று நடிகர் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கருத்து தெரிவித்துள்ளார்.