தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லையாம்!

புதன் டிசம்பர் 08, 2021

தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு அஞ்சவில்லை என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.


இன்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமது தரப்பினர் தேர்தலை நடத்துவதை ஒருபோதும் தாமதப்படுத்தவில்லை அல்லது பொது மக்களுக்கு முகம் கொடுப்பதில் அச்சம் கொள்வதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தனது வேலைத் திட்டத்தில் நம்பிக்கையுடனும் திருப்தியுடனும் இருந்தால், தாமதமின்றி தேர்தலை நடத்த வேண்டும் என  நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் இதன் போது தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி முடிவடைவதாகவும், தேர்தலை உடனடியாக நடத்துமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.