தடைகள் ஏற்பட்டாலும் பின் நிற்கப் போவதில்லை!

புதன் ஜூன் 19, 2019

பல்வேறு தடைகள், சவால்கள் ஏற்பட்டாலும் போக்குவரத்து ஒழுங்குமுறையை ஏற்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய  நடவடிக்கைகளுக்காக, தான் பின் நிற்கப் போவதில்லை என போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வருடாந்தம் இலங்கையில் 15,000 பேர் வாகன விபத்துகளால் உயிரிழிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துகளால் அதிகம் உயிரிழப்புகள் ஏற்படுவற்கான காரணம் போக்குவரத்து ஒழுங்குமுறை இன்மையே எனத் தெரிவித்துள்ள அவர், தன்னுடைய பதவிக் காலத்தில் போக்குவரத்து ஒழுங்குமுறையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன்று காலை மருதானையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்தப் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.