தடைகளை உடைத்தெறிந்து தமிழர் தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்

வெள்ளி நவம்பர் 27, 2020

தமிழீழ தேசிய மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு சிறிலங்கா அரச படைகளும் பொலிஸாரும் நீதிமன்றும் தடைகளை விதித்திருந்த நிலையில் அவற்றை உடைத்தெறிந்த தமிழர் தாயகத்தின் உள்ள வீடுகளில் இன்று மாவீரர்கள் நினைவுகூரப்பட்டுள்ளனர். 

k

எழுச்சிகொண்ட எந்தவொரு இனமும் வீழ்ச்சி கண்டதாக வரலாறு இல்லை என்ற தேசியத் தலைவரின் சிந்தனை வரிகளுக்கு இணங்கள் இன்று தமிழீழத் தாயகம் உணர்வுபூர்வமாக எழுச்சி அடைந்தது. வீடுகள் எங்கும் தமிழீழ தேசிய மாவீரர்களுக்கு சுடரேற்றப்பட்டது. 

km

சிங்கள அரசின் நீடித்த அடக்குமுறைகளுக்கு எதிராக கரத்தில் ஆயுதம் ஏந்தி உள்ளத்தில் விடுதலைத் தீயைச் சுமந்து ஒப்பற்ற தலைவனின் வழிகாட்டலில் தமிழ் மக்களுக்கு தமிழீழத் திருநாட்டை அமைப்பதற்காக களமாடி மடிந்த மாவீரர்கள் உறங்கும் துயிலும் இல்லங்கள் படையினரால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 

o

ஏற்கனவே, படையினர் ஆக்கிரமித்துள்ள துயிலும் இல்லங்களை விட ஏனைய துயிலும் இல்லங்களில் மாவீரர்களின் உறவுகளும் பொதுமக்களும் கடந்த காலங்களில் மாவீரர் நாள் நினைவேந்தலை செய்த நிலையில் இந்த ஆண்டு சிங்கள அடக்குமுறை அரசின் அரூப கரங்கள் இதைத் தடுத்து நிறுத்தின. 

ln

பொது இடங்களிலும் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் தினத்தை அனுட்டிக்க முடியாமல் அதிகளவான படையினரும் பொலிஸாரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டிருந்தனர். 

tb

எனினும், அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்த தமிழீழ மக்கள் தமக்காக விதையாகிப்போன வீரர்களுக்கு வீடுகளில் உணர்வெழுச்சியுடன் சுடர் ஏற்றினர்.

g

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாவீரர் நினைவு சுமந்தவாறு விளக்கேற்றி அவர்களை வழிபட்டமை வரலாற்று முக்கியத்துவம் மிக்க நினைவேந்தலாக அமைந்தது.

v

துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் எனில் வீடுகளில் இருந்து ஒருசிலர் மாத்திரமே சென்று பங்குபற்றக்கூடியதாக இருந்த நிலையில், இன்று வீடுகளில் இருந்த அனைவரும் ஒருசேர உணர்வுடன் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தியமையை அவதானிக்க முடிந்தது. 

b

வடக்கு – கிழக்கு எங்கும் உள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் மாவீரர்களுக்கு நினைவுச்சுடர் ஏற்றினர். சில இடங்களில் சிங்களப் பொலிஸார் பார்த்திருக்க நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது. 

f

வடதமிழீழத்தில், யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம், வடமராட்சியின் சில இடங்கள், வன்னியில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் போன்ற இடங்களில் படையினர் பொதுமக்களை அச்சுறுத்தும் பாணியில் செயற்பட்டனர். 

d

இதேபோன்றே தென் தமிழீழத்திலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வீதியால் சென்ற பொதுமக்கள் படையினரால் அச்சுறுத்தப்பட்டனர்.

q

முன்னதாக பொது இடங்களில் சுடர் ஏற்றி மாவீரர் வணக்கம் செய்ய நீதிமன்றங்கள் தடை விதித்திருந்தன. ஆனால், படையினர் வீடுகள், அலுவலகங்களில் கூட நினைவேந்தல் செய்யக்கூடாது என மக்களை அச்சுறுத்தினர். 

c

அடக்குமுறைக்குள் இருக்கும் எந்த இனமும் கிளர்ந்து எழும் என்பதற்கு இணங்க இன்று தமிழர் தாயகம் புரட்சியுடன் மேற்கிளம்பி வீடுகள், வர்த்தக நிலையங்கள், அலுவலகங்கள் எங்கும் மாவீரர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினர். 

l

r
 

 

kmm