தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக ஈழப் பெண்

சனி நவம்பர் 21, 2020

கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டு பிடிக்கும் ஆய்வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கை யைப் பூர்வீகமாகக் கொண்ட பேராசிரியர் மஹேஷி என்.ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல் கலைக்கழகம் முன்னெடுத்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் ஆய் வின் பிரதான ஆய்வாளர்களாக இலங்கையைப் பூர்வீக மாகக் கொண்ட பேராசிரியர் மஹேஷி என்.ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் பிறந்த குறித்த பெண் பிரித்தானியாவில் வைத்திய கல்வியைத் தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் கொவிட் -19 கொரோனா தொற்று எதிராகத் தடுப்பூசி கண்டுபிடிப்பது குறித்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத் தினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆய்வின் பிரதான ஆய் வாளராக உலகம் முழுவதும் அவர் பிரபலமடைந்துள்ளார்.

அந்த தடுப்பூசி குறித்து மேற்கொள்ளப்படுகின்ற மருத்துவ வேலை தொடர்பில் ” The Lancet” என்ற சஞ்சிகை யில் பதிவிடப்படும் அறிக்கையில் பேராசிரியர் மகேஷி ராமசாமியின் பெயர் முதலிடத்தில் உள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், க்ரைஸ்ட் வித்தியாலயத் தின் வைத்தியம் தொடர்பான பட்டம் பெற்றுள்ள அவர் தொற்று நோய் தொடர்பில் ஒக்ஸ்போர்ட் மற்றும் லண்டன் வைத்திய நிறுவனத்தில் அவர் பட்டம் பெற்றுள்ளார்.

அவர் தற்போது பல்கலைக்கழக பேராசிரியராக பணி யாற்றும் அவர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் NHS அறக்கட்டளையில் பணியாற்றுகிறார்.

அதற்கமைய அவர் மேகன் வைத்தியசாலை கல்லூரியின் பிரதான பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.

பேராசிரியர் மஹேஷி என். ராமசாமியின் பெற்றோரும் புகழ்பெற்ற விஞ்ஞானிகளாவார்.

அவரது தாயார் பேராசிரியர் சமரநாயக்க ராமசாமி. கொழும்பின் விசாகா கல்லூரியின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறை யில் முதலாவது வகுப்பில் பட்டம் பெற்றாறார்.

பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொது நல வாய உதவித்தொகைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

பின்னர் பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இலங்கை என்ற பெருமையைப் பெற்றார்.

வைத்தியர் மகேஷி என். ராமசாமியின் தந்தை ரஞ்சன் ராமசாமி ஒரு விஞ்ஞானி.

மூன்று பிள்ளைகளின் தாயான மஹேஷி ராமசாமி, ஒக்ஸ் போர்ட் கொவிட் -19 தடுப்பூசி ஆய்வில் இணைந்துள்ளமை குறித்தும் அவரது ஆராய்ச்சிக்குச் சர்வதேச அங்கீகாரம் பெற்றமையும் இலங்கையர்கள் அனைவரும் மிகவும் பெருமைப்பட வேண்டிய விடயமாகும் என சிங்கள ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.