தடுப்பூசி போட்ட வெளிநாட்டினருக்கு நியூசிலாந்தில் அனுமதி

வியாழன் நவம்பர் 25, 2021

2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்திகதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம்.

கொரோனா தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட வெளிநாட்டினர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நியூசிலாந்துக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை நிர்வகிக்கும் சிறப்பு மந்திரி கிறிஸ் ஹிப்கின்ஸ் இதனை அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில் “கொரோனா தொற்றில் இருந்து நமது நாட்டை பாதுகாப்பாக வைத்திருத்தக நாம் எடுத்த முதல் தீர்க்கமான நடவடிக்கை நமது எல்லைகளை மூடுவது. அதே போல் கொரோனா கட்டுபாடுகளை தளர்த்துவதில் நமது கடைசி நடவடிக்கை எல்லைகளை திறப்பது ஆகும்” என்றார். 

மேலும் அவர் “ஆஸ்திரேலியாவில் வசிக்கும் முழுயைாக தடுப்பூசி போட்டுக்கொண்ட நியூசிலாந்து பிரஜைகள் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்திகதி முதல் நியூசிலாந்து வரலாம். அதே போல் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்ட நியூசிலாந்து மக்கள் பிப்ரவரி 13-ந்திகதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 30-ந்திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்” என கூறினார்.