தூக்கம் அற்றவர்கள் நாங்கள் தானே!

வெள்ளி டிசம்பர் 27, 2019

அக்கினி
குஞ்சொன்று
கண்டேன் அதை
அங்கொரு
காட்டிடை
பொந்தினுள்
வைத்தேன்
வெந்து தணிந்தது
காடு அதில்
குஞ்சென்றும்
மூப்பென்றும்
உண்டோ
பாரதி பாடினான்
ஈழத்தமிழா
நீ விழித்துக்கொள்
இதுவரை
தமிழிலும்
பாடப்பட்ட
சிறிலங்கா
தேசிய கீதம்
இனி சிங்கள
மொழியில் மட்டும்
ஒலிக்கவேண்டுமாம்
ஒன்று பட்ட
இலங்கைக்குள்
தீர்வு எனக்கூறிய
அந்த பெரியவரின்
தூக்கம் கலையுமா
பாவம் தூங்கட்டும்
விடுங்கள்
தூக்கம் அற்றவர்கள்
நாங்கள் தானே

றொப்