துப்பாக்கி சூடு! இருவர் பலி!

வியாழன் மார்ச் 14, 2019

மொரடுமுல்லை காவல் துறை  பிரிவுக்குட்பட்ட, மொரடுமுல்லை-பிலியந்தலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்கருகில், இன்று காலை (14) 10.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் வந்த இருவரே, சரமாரியாக அங்கிருந்த மூவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனரென, காவல் துறையினர்  தெரிவித்தனர்.

சம்பவத்தில், குறித்த வீட்டுக்கு எதிர்பக்கமாக வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து  உரிமையாளரும், அவரது மகனின் நண்பரும் உயிரிழந்துள்ளனர்.  உரிமையாளரின் மகன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருதரப்புக்கிடையில் நிலவிவந்தமோதலே, இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு  காரணமென, காவல் துறையினர் தெரிவித்தனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதுடன்,  ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கையில், மொரடுமுல்லை காவல் துறை துரித விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனரென, காவல் துறை  தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.