துப்பாக்கி பிரயோகத்தில் காயமமைடந்தவர் மரணம்

சனி ஜூலை 11, 2020

மொரட்டுவையில் நேற்றிரவு காவல் துறை சோதனை சாவடியொன்றில் நபர் ஒருவர் காவல் துறையால்  சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

லுனாவையில் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

வீதிச்சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளை காவல் துறை  சோதனையிட்டவேளை அதிலிருந்த மூவர் காவல் துறை  மீது தாக்குதலை மேற்கொண்டனர் என காவல் துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

முச்சக்கரவண்டியிலிருந்த நபர்கள் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதுடன் காவல் துறை  தங்கள் நடவடிக்கையை மேற்கொள்ளவிடாமல் தடுத்தனர் என காவல் துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 இதன்போது காவல் துறை  உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் நபர் ஒருவர் காயமடைந்தார்,அவர் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல் துறை   ஊடகபிரிவு தெரிவித்துள்ளது. 


லுனாவையை சேர்ந்த 39 வயதுநபரே உயிரிழந்துள்ளார் என காவல் துறை  ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.