துப்பாக்கி ரவைகள் மீட்பு!

சனி சனவரி 25, 2020

 கொக்கிராவ - சந்தகல்பாய பகுதியில் உள்ள வீட்டுத்தோட்டத்தில் இருந்து 11 துப்பாக்கி ரவைகள் மீட்க்கப்பட்டுள்ளது என காவல் துறையினர்  தெரிவித்தனர். 

 குறித்த வீட்டுத் தோட்டத்தின் உரிமையாளர் வழங்கிய தகவலுக்கு அமைய ரவைகள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர். 

 டி 56 ரக துப்பாக்கிகள் மற்றும் எம்.பி.எம்.ஜீ ரக துப்பாக்கிகளுக்கும் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளையே காவல் துறையினர்  மீட்டுள்ளனர்.

அத்தோடு சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்மை குறிப்பிடத்தக்கது.