துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலி;மாலி தீவு!

திங்கள் ஜூன் 10, 2019

மேற்கு ஆப்ரிக்காவிலுள்ள மாலி தீவில், கவுண்டு என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை 95 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 19 பேரை காணவில்லை என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிராமத்திலுள்ள குடிசைகளுக்கு தீவைத்து, பின் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபகாலமாக மாலியில், ஜிகாதிக்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் மாலியிலுள்ள புலானி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.