துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

திங்கள் ஏப்ரல் 15, 2019

புத்தள, கோனகங்ஆர காவல் துறை பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இன்று  அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மொனராகல சிரிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர காவல் துறையினர் மேற்கொண்டு வருவதாகவும்காவல் துறை ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது.