துப்பாக்கியுடன் இளைஞன் கைது

சனி மார்ச் 06, 2021

வவுனியாவில் சட்டவிரோத துப்பாக்கியுடன் இளைஞன் ஒருவரை விஷேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர்.

புளியங்குளம் விஷேட அதிரடி படையினரிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று (05) இரவு 10.30 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது வவுனியா பாலமோட்டை வயல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற இளைஞனிடம் சோதனை மேற்கொண்ட போது குறித்த இளைஞனிடமிருந்து சட்டவிரோத துப்பாக்கியையும் (இடியன் துப்பாக்கி) இளைஞனையும் கைது செய்த விஷேட அதிரடி படையினர் ஓமந்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞன் பாலமோட்டை பகுதியை சேர்ந்த 32 வயதுடையவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஓமந்தை காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்