துப்பரவு செய்யப்பட்ட யாழ்.நல்லூரடியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடம்!!

சனி மே 21, 2022

யாழ்ப்பாணம் நல்லூரடியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவிடம் இன்று மாலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் துப்பரவு செய்யப்பட்டது.

இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர்.

111

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். மாவட்டம் நல்லூர் முன்றலில் 15.09.1987 இருந்து 26.09.1987 வரை பன்னிரண்டு நாட்கள் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்து வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் யாழ். மாவட்ட அரசியல்த்துறைப் பொறுப்பாளர் தியாக தீபம் லெப். கேணல் திலீபன்  அவர்கள்