துருக்கியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் பலி!

திங்கள் சனவரி 13, 2020

துருக்கியில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலியாகினர். 8 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த விபத்து குறித்து துருக்கி கடற்படை கூறும்போது, “ துருக்கியின் மேற்கு பகுதியில் ஏஜியன் கடலில் அகதிகள் வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் பலியாகினர். 8 பேர் மீட்கப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.

பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மத்திய கிழக்கிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் மக்களுக்கு துருக்கி முக்கிய பயண பகுதியாக இருந்து வருகிறது.

கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2 லட்சத்துக்கு அதிகமான மக்கள் துருக்கி அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

முன்னதாக சிரியாவின் வடக்குப் பகுதியில் சிரிய அகதிகளைக் குடியமர்த்துவது தொடர்பான தனது முடிவுக்கு ஆதரவு அளிக்காத இஸ்லாமிய நாடுகளையும் துருக்கி அதிபர் எர்டோகன் முன்னரே விமர்சித்திருந்தார்.

துருக்கியில் தற்போதைய நிலவரப்படி சுமார் 3.7 மில்லியன் சிரிய அகதிகள் உள்ளனர். உலகிலேயே அதிக அளவில் அகதிகளைக் கொண்ட நாடாக துருக்கி அறியப்படுகிறது.