துருக்கியின் தூதரகத்துக்கு முன் குர்திஷ் மக்களின் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு!

ஞாயிறு அக்டோபர் 13, 2019

குர்திஷ் இனமக்கள் மீது துருக்கி மேற்கொள்ளும் இனவழிப்புக்கு எதிராக  சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் உள்ள துருக்கியின் தூதரகத்துக்கு எதிரே குர்திஷ் மக்கள் மற்றும் மனிதவுரிமை ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட போராட்டத்தில்  சுவிஸ் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதன் விளைவாக ஒரு எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு காவல்துறையினர் நடத்தினர் என சர்வதேசா ஊடகங்கள் தெரிவிக்கின்றன.