Terms and privacy policyயில் Agree செய்யும் பட்சத்தில் ஆபத்து அதிகம்

ஞாயிறு சனவரி 10, 2021

06.01.2012லிருந்து வாட்சப்பினை பயன்படுத்தக்கூடிய அனைவருக்கும் Terms and privacy policyயினை Agree செய்யவும் என்ற ஒரு Screen Message ஒன்று வந்துள்ளது. சிலர் அதனை Agreeயும் செய்திருப்பீர்கள்.

அவ்வாறு Agree செய்யாத பட்டசத்தில் இவ் வாட்சப்பினை 08.02.2021 வரைதான் பயன்படுத்தப்பட முடியும் என்றவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp update எதற்காக Terms and privacy policyயினை Agree செய்ய வேண்டும்
இவ்வாறு ஒரு message வாட்சப்பினை திறந்ததும் பலருக்கும் வந்ததாக குறிப்பிடுள்ளனர். பொதுவாக வாட்சப்பில் பல மறைமுகமான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றது.

இதனால் நம்மில் பலர் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வந்திருக்கக்கூடிய இவ் வாட்சப் Appனைப் பயன்படுத்துவதன் மூலமும் நாம் அனைவருமே உண்மையில் பாதிக்கப்படத்தான் போகின்றோம்.

இவ்வாறு வந்த Terms and privacy policyயினை ஒவ்வொன்றாக வாசித்தபோது பல ஆபத்தான விடயங்கள் காணப்பட்டது.

இதில் முதலில் குறிப்பிடப்பட்ட விடயம், வாட்சப்பில் நீங்கள் மற்றவர்களுக்கு அனுப்பக்கூடிய மற்றும் பெறக்கூடிய messageகளிலிருந்து தகவல்களைப் பெற்று,

அதனை Facebook நிறுவனமானது அவர்களுடைய வணிகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்போகின்றோம் என்றும்,

இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களை பேஸ்புக்குடன் (Facebook) இணைந்த ஏனைய வணிக நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஏன் Facebook? நான் வாட்சப்தானே பயன்படுத்துகிறேன் என்ற கேள்வி சிலருக்கு எழும். ஏன் என்றால் வாட்சப் நிறுவனத்தினை 2014 பெப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் வாங்கிவிட்டது.)

அதாவது பொதுவாக உலகில் காணப்படுகின்ற ஏனைய நிறுவனங்களுடனல்லாது பேஸ்புக்குடன் தொடர்புபட்ட வணிக நிறுவனங்களுடன் மாத்திரம் பகிர்ந்து கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வாறு எடுக்கப்படுகின்ற தகவல்களின் பயன் யாதெனின், நீங்கள் பொதுவாக ஒரு Samsung மொபைலினை வாங்குவது பற்றி வாட்சப்பில் உங்கள் நண்பருடன் chat செய்து கொண்டிருந்தால்,

அந்த தகவலினை எடுத்து உங்களுக்கு வாட்சப்பின் Advertisement ஊடாகவோ அல்லது வாட்சப்காக நீங்கள் பயன்படுத்துகின்ற நம்பரினைப் பயன்படுத்தி திறக்கப்பட்ட


பேஸ்புக்கினூடாகவோ அவர்கள், அவர்களுடைய விளம்பரம் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்வார்கள். இதுமட்டுமல்லாமல், ஏனைய வணிக தேவைகளுக்கும் பயன்படுத்தில் கொள்வார்கள்.

இவ் Terms and privacy policyக்கு Agree செய்யும் பட்சத்தில் – WhatsApp update
இதன்மூலம் உங்களுடைய அந்தரங்க விடயங்களைக் கூட நீங்கள் ஏனையவர்களுக்கு பகிர நேரிடலாம்.

ஹலோ என்று அனுப்பக்கூடிய messageலிருந்து படங்கள், விடியோக்கள் என அத்தனை விடயங்களையும் அவர்கள் கவனித்து அவர்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்துவார்கள்.

இதனைத்தான் அவர்கள் சிம்பிளாக அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் அடுத்த conditionகளில் குறிப்பிட்டுள்ள விடயங்களில், நாம் ஏதாவது ஒரு வாட்சப்பில் காணப்படுகின்ற பல அம்சங்களில் (Features) ஏதவாது ஒன்றினைப் பயன்படுத்த வேண்டுமாக இருந்தால் அதனோடு தொடர்புடைய அத்தனை வசதிகளையும் பகிர வேண்டும்.

உதாரணமாக, GPS லொகேஷன் பயன்படுத்தப்பட வேண்டுமாக இருந்தால், அந்த அம்சங்களோடு சார்ந்த அனைத்து தகவல்களையும் நாமும் share செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்யும் பட்சத்தில்தான் அவ் வாட்சப் அம்சத்தினை பயன்படுத்த முடியும். அதாவது, நாம் பகிரக்கூடிய இவ்வாறான தகவல்களை அவர்களும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

நாம் எங்கு செல்கின்றோம், யாருக்கு லொகேஷனை பகிர்கின்றோம், தற்போது எங்கு அதிகமான நேரத்தினை செலவு செய்கின்றோம்,

போன்ற விபரத்தினை பெற்று Facebook மற்றும் அதனுடைய ஏனைய துணை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும்.

இவ்வாறு உங்களிடமிருந்து தகவல்களைப் பெற்ற பின்புதான் வாட்சப்பானது அதனுடைய அம்சங்களை உங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும்.

அதுமட்டுமல்லாது, நாம் ஏதாவது ஆடியோவினை  ரெகோர்ட் செய்து அனுப்பும் பட்சத்தில் அதனையும் அவர்கள் கேட்டு அதனை அவர்களுடைய பிசினஸ் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.

தனிப்பட்ட தகவல்கள்
மேலும், நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கு, குடும்ப உறுப்பினர்களுக்கு அல்லது யாருக்காவது அவர்கள் ஓப்லைனில் (Offline) இருக்கும் பொழுது ஏதாவது

Message, image, audio, videoயினை அனுப்பினால் அதனை 30 நாட்களுக்கு வாட்சப்பினுடைய சேவையகத்தில் (Server) வைந்திருந்து அவர்கள் இடையில் online வந்தால் அதனை அனுப்பிவிடுவர்கள்.

அவ்வாறு இல்லாவிட்டால் அதனை Delete செய்து விடுவார்கள் என்ற விடயத்தினையும் இவ் Terms and privacy policyயில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அதேபோன்று நீங்கள் forward செய்யக்கூடிய messageனை அவர்கள் அவர்களுடைய சேவையகத்தில் (Server) காலம் முழுவதும் பதிந்து வைத்திருப்பார்கள்.

ஒரு வேளை யார் அந்த Messageனை உருவாக்கி யாரெல்லாம் பகிர்ந்து கொள்கின்றார்கள் என்ற விபரத்தினைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இருக்கலாம்.

எங்களுடைய மொபைலில் எவ்வாறான தகவல்களை பெற்றுக்கொள்கிறார்கள் என்றால், என்ன வகையான மொபைல் நாம் பயன்படுத்துகிறோம் என்றும்,

அதில் இருக்கக்கூடிய OS, Battery Level, signal Strength in location, எந்த வகையான versionக் கொண்ட Appயினைப் பயன்படுத்துகின்றோம், நாம் பயன்படுத்தக்கூடிய Internet Browsersனுடைய தகவல்,

பயன்படுத்தும் mobile network பற்றிய விபரங்கள், எந்த நபருடன் அதிகமாக கோலில்  கதைக்கிறோம், அவர்களுடைய contact தகவல்கள் போன்ற அதிகமான தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.

இதுமட்டுமல்ல, இதே போன்று ஏராளமான தகவல்கள்களைப் அவர்கள் பெற்றுக் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அதே போன்று பரிவர்த்தனை (Transaction)  தரவுகளையும் பெற்றுக் கொள்ளப்போவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அதாவது எவ்வாறானர்களுடன் தொடர்பினைப் பேணுகின்றோம், அவர்களோடு எவ்வாறு நாம் பேசுகின்றோம், எவ்வாறு நம்மளுடைய அனுகுமுறை காணப்படுகின்றது போன்ற தகவல்களையும் பெற்றுக் கொள்ளப் போகின்றார்கள்.

மொத்தத்தில் நம்மளுடைய வாட்சப்பினை பக்கத்திலிருந்து வேரொரு நபர் உற்று பார்ப்பதைப் போன்று இருக்கப்போகின்றது. இவ்வாகையான விடயங்களை மறைமுகமாக அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

WhatsApp update வேறு என்ன ?
மேலும் Business வாட்சப் Account பயன்படுத்தக்கூடியவர்களது (UPI Details) Transaction data, பணப்பரிமாற்றம் போன்ற விடயங்களையும் அவர்கள் எடுக்கப்புாவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆக, அந்த Terms and privacy policyயில் Agree செய்யும் பட்சத்தில் மேல் குறிப்பிட்ட அனைத்துக்கும் நீங்கள் இணங்குவதாக அவர்கள் கருத்திற்கொள்வார்கள்.

அதாவது, எங்களுடைய அனைத்து தகவல்களையும் பயன்படுத்துங்கள், எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றவாறு அமையும்.

மேலும் இவ் நிபந்தனையில் உள்ள நல்ல விடயம் யாதெனின், வாட்சப்பில் இல்லாத ஒருவருடைய தகவல்களை நாம் பெற்றுக்கொள்ள மட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மொத்தத்தில், நீங்கள் Agree செய்யும் பட்சத்தில் மாத்திரமே 08.02.2021க்கு பின்பு இவ் வாட்சப்பினைப் பயன்படுத்த முடியும்.

இல்லாவிடின் உங்களுக்கான அனுமதியானது ரத்துசெய்யப்படும். இங்கு இவ்வாறான நன்மையும் தீமையும் காணப்படுகின்றது.

பலர் வாட்சப்பினைப் பயன்படுத்துவதனை தவிர்க்க முடியாமல் கூட போகலாம். இவ்வாறாவர்ககள் கட்டாயம் February 08 வரை காத்திருந்து அன்று அதற்கான மாற்றீடு கிடைக்காத பட்சத்தில் சிந்தித்து செயல்பட முடியும்.

மேலும் அதிகமானவர்கள் இக் conditionsக்கு Agree செய்யாத போது நிறுவனத்தினுடைய வீழ்ச்சி அதிகமாக காணப்படும். இதன் போது அவர்கள் இவ் Terms and privacy policyயினை நீக்கவும் வாய்ப்புண்டு.

இதனால் கடைசி வரை காத்திருந்து இயலாத பட்சத்தில் மாத்திரம் இதனை பொதுத் தேவைக்காக பயன்படுத்தி கொண்டு ஆபத்திலிருந்து தவிர்ந்து கொள்ள முடியும்.