உக்ரைன் நாட்டிலுள்ள டோனி கொரில்லாவின் 45வது பிறந்தநாள்!

சனி ஓகஸ்ட் 10, 2019

டோனி கொரில்லாவின் 45 வது பிறந்தநாளானது கியேவ் மிருகக்காட்சிசாலையில் கொண்டாடப்பட்டது.

கொரில்லா டோனி 1974 இல் நியூரம்பெர்க் (ஜெர்மனி) மிருகக்காட்சிசாலையில் பிறந்தது. பின்னர் கொரில்லாவானது ஹனோவர் மற்றும் சார்ப்ரூக்கனின் உயிரியல் பூங்காக்களில் வளர்க்கப்பட்டது.

இந்நிலையில் அதன் 45 வது பிறந்தநாள் விழாவானது கேக் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதை தொடர்ந்து டோனியின் பிறந்தநாளில் பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டு புகைப்படங்களை எடுத்து தனது வாழ்த்தினை தெரிவித்தனர்.

மேலும் டோனியானது உக்ரைனில் உள்ள ஒரே ஒரே கொரில்லா என்பது குறிப்பிடத்தக்கது