உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்?அமெரிக்கா மறுப்பு!!

சனி மே 21, 2022

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 3 மாதங்களை எட்ட உள்ளது. ஆனாலும், ரஷியா ராணுவத்துக்கு எதிராக உக்ரைனும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறது.

10.23: உக்ரைனுக்கு எதிராக படையெடுப்பில் எதிரிகளின் விமானங்களை தாக்க லேசர் ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாக ரஷியா அறிவித்தது. ‘ஜதீரா’ என்று பெயரிடப்பட்ட இந்த புதிய தலைமுறை ஆயுதம் எதிரிகளின் இலக்கை எரித்துவிடும் என ரஷியா கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்கா, ரஷியா லேசர் ஆயுதத்தை பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறியுள்ளது.

03.45: உக்ரைனின் மரியுபோல் நகரில் உள்ள அசோவ் உருக்காலையில் இருந்த படைவீரர்கள் 2 ஆயிரம் பேர் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய ராணுவ மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மரியுபோல் நகரம் முழுவதும் ரஷிய படைகள் வசம் வந்துவிட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
00.45: ரஷியாவின் பயங்கர தாக்குதலுக்கு கடும் சேதங்களைச் சந்தித்து வரும் உக்ரைனுக்கு நிதியுதவியாக 40 பில்லியன் டாலர்களை (ரூ.3.08 லட்சம் கோடி) அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன் 40 பில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்த நிலையில் மீண்டும் நிதியுதவி செய்ய அமெரிக்கா முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உக்ரைனுக்கு தொடர்ந்து நிதியுதவி அளித்து வரும் அமெரிக்காவுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.