உலக வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒன்றாகத் தமிழினப் படுகொலை - கனடிய மாநகர முதல்வர்!

சனி மே 09, 2020

தமிழினப் படுகொலை நினைகூரல்களில் தானும் தனது மாநகர சபையின் உறுப்பினர்களும் இணைவதாக கனடாவின் மிசிசாகோ மாநகர முதல்வர் போணி குறோம்பி தெரிவித்துள்ளார்.

உலக வரலாற்றின் இருண்ட பக்கங்களில் ஒன்றாக இலட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்ட தமிழினப் படுகொலை திகழ்வதாகவும் தனது செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.