உலகின் மிகக் குள்ள மனிதர் விடைக்கொடுத்தார்!

சனி சனவரி 18, 2020

உலகில் நடக்கும் திறன் மிகக் குள்ள மனிதனாக  கின்னஸ் பதிவுகள் மூலம் அறியப்பட்ட மனிதர் நேபாளத்தின் நொகாரா நகரில் வைத்து உயிரிழந்துள்ளார். 

பாகேந்திர தாபா மாகர் எனப்படும் இவர் தனது 27 ஆவது வயதில் உயிரிழந்துள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டில் இவரது 18 ஆவது பிறந்த தினத்தன்று இவரே உலகின் நடக்கும் திறன்கொண்ட குள்ள மனிதர் என்று கின்னஸ் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவரது உயரம் 1.8 அடியெனவும் இவருக்கு முன்பாகவும் நேபாளத்தை சேர்ந்த டங்கி எனப்படும் ஒருவரே இவ்வாறு குள்ள மனிதரென அறியப்பட்டிருந்தாகவும், அவர் 2015 ஆம் உயிரிழந்திருந்த நிலையிலேயே அவருக்கு அடுத்தபடியாக மேற்படி கின்னஸ் பதிவில் மாகரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.