உலகம் பூராகவுமுள்ள மக்கள் படுகொலைகளால் களைத்து போய்விட்டனர்!

ஞாயிறு ஏப்ரல் 21, 2019

உலகத்தில் கெட்டவர்களை விட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள். பாரபட்சத்தையும், வெறுப்பினையும் எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான படிநிலைகளை எடுத்துள்ளோம் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிண நாடுகளில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களையடுத்து உலகநாடுகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கனேடிய பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கனேடிய பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேலும் தெரிவித்ததாவது.

சபாநாயகர் அவர்களே, நான் ஆரம்பிப்பதற்கு முன்னரே ட்றாம் வண்டி சூட்டுத்தாக்குதல் செய்தியினால் தள்ளாடிப்போயுள்ள யுட்ரிட்ச்ட் மற்றும் நெதர்லாந்து மக்களுடன் எமது இதயங்கள் உள்ளதெனச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இது ஒரு பிந்திக் கிடைத்த செய்தியாகும். ஆனாலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், காயப்பட்டுள்ளார்கள் என எமக்குத் தெரியும். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கும் என பொலிசார் கருதுகின்றனர்.

எமது டச்சு நண்பர்கள் வன்முறையின் பின்விளைவுகளோடு அவர்கள் பிடிபட்டிருக்கும் நிலையில் நாம் அவர்களோடு நிற்பதுடன், நிகரில்லாத ஆதரவை எமது சகபாடிகளுக்கு வழங்குவதற்கு நாம் அவர்களைச் சென்றடைவோம். .

எமது நாடுகளுக்கிடையிலான நெருக்கமான பிணைப்புக்கள் குறித்து அவர் பேசியிருந்தார். எப்போதும் போலவே, நெதர்லாந்தின் முன்னே இருக்கும் துன்ப நாட்களில் கனடா அவர்களோடு இருக்கும். நியூசிலாந்தில் துன்புறும் எல்லோருக்கும் கனடாவின் ஆழ்ந்த அனுபவங்களைத் தெரிவிப்பதற்கு நான் இன்று எழுந்து நிற்கின்றேன். சில தினங்களுக்கு முன்பு நட்பு நாடும், நெருக்கமான நாடுமான நியூசிலாந்து, இஸ்லாமிய எதிர்ப்பினால் தூண்டப்பட்ட வரலாற்றில் மிக மோசமான பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டது. வழிபட்டுக் கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என ஐம்பது பேர் கொல்லப்பட்டனர். அத்துடன், மேலும் பலர் காயமடைந்தனர். அவர்கள் பயங்கரவாதியால், ஒரு கோழையால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நியூசிலாந்து பிரதமர் ஆர்டென்னுடன் நான் உரையாடினேன். எமது மனமார்ந்த அனுதாபங்களையும்  ஆதரவையும் அவர்களுக்கு வழங்கினேன். இந்த துன்பியல் சம்பவத்திற்கு எதிர்வினையாக அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவத்திற்கும் இரக்கத்திற்கும் எனது பாராட்டினையும் தெரிவித்தேன்.

தமது அன்புக்குரியோருக்கு விடைகொடுப்பதற்கான சந்தர்ப்பம் ஒன்றையேனும் பெறாத பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், நண்பர்களின் துன்பத்தில் நாமும் பங்கெடுக்கிறோம். ஒரு வெறுப்பான கருத்தியலை உள்வாங்கிக் கொண்டிருந்த, ஒரு வெறுப்பு கொண்ட தனிநபரால் இந்த அன்புக்குரியவர்கள் கொல்லப்பட்டனர்.

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட முஸ்லிம்களிற்கான இல்லமாக கனடா உள்ளது. அவர்கள் சுதந்திரமானதும் திறந்த மதச்சார்பற்ற ஜனநாயத்தையுடையதுமான கனடாவில் செழிப்புடன் வாழ்கின்றனர். இந்த சுதந்திரத்தைப் பேண வேண்டியது எமது பொறுப்பாகும். அதன் மூலம் மத நம்பிக்கை பின்பற்றத் தெரிவு செய்பவர்கள் வன்முறைப் பயமின்றி, அதனைச் செய்துகொள்ள முடியும். கனடாவிலும் நியூசிலாந்திலும் உலகம் முழுவதிலுமுள்ள எமது முஸ்லிம் நண்பர்களுக்கு, நாம் அவர்களுக்காக துக்கப்படுகின்றோம் என்பது தெரிய வேண்டும். நாம் அவர்களது வலியை அறிந்து கொண்டு அவர்களை நாம் அன்பு செய்கிறோம். அடுத்து வரும் சிரமமான நாட்களிலும், வரும் வாரங்களிலும் நாம் அவர்களோடு நிற்போம். “பூமியில் சாந்தத்துடனும் அடக்கத்துடனும் நடந்துகொள்வோரே மிகவும் இரக்கம் மிகுந்தவரின் உண்மையான ஊழியர்களாவார். கோழைகள் அவர்களுடன் சண்டையிடும் போதெல்லாம் அவர்கள் சமாதான வார்த்தைகளால் பதிலளிப்பர்” என் குர்ஆன் எமக்குச் சொல்கிறது.

அந்த எண்ணம் பரிச்சயமானதாக இருக்குமாயின், மக்கள் சிலவேளைகளில் மத்தேயு நற்செய்தியில் இதனைக் கேட்டிருப்பர். அது பழிவாங்குகை எதிர்ப்புக்காட்டுகை வேண்டாம் எனவும் மறுகன்னத்தைக் காட்டுமாறும் பேசுகிறது. உண்மையில் இவற்றினை பின்பற்றுவதற்கு நாம் தெரிவு செய்வோமாயின் எமது மத நம்பிக்கைக்குள் காணப்படும் பாடங்கள் எம் அனைவரையும் ஒன்றாகப் பிணைக்கும் என்பதுடன், இது எம்மைப் பிரிக்க நாடிநிற்கும் அந்த விடயங்களைக் காட்டிலும் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கியுபெக்கின், செய்ன்ட்-பொய் பகுதியில் ஆறு அப்பாவி ஆண்களிற்கு அஞ்சலி செலுத்தும் ஒரு விழிப்பு ஆராதனையில் நான் பங்குபற்றியிருந்தேன்.

கிறிஸ்ட்சேர்ச் நகரில் வழிபட்டுக் கொண்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டவர்களின் சகோதரர்களாக, தந்தையர்களாக, மற்றும் மகன்களாக இவர்கள் உள்ளனர். அவர்களது குடும்பத்தினருடன் நான் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டேன். அத்தகைய வெறுப்புச் செயற்பாடொன்றை தமது சமுதாயம் அனுபவித்தது என்பதனை இந்த குடும்பங்களால் நம்பவே முடியவில்லை.

செய்ன்ட்-பொய் மற்றும் கிறிஸ்ட்சேர்ச் போன்றவற்றை ஒத்த துன்பியல் சம்பவங்கள் பொதுவானவையாக மாறிவருகின்றன. அப்பாவி மக்கள் கொல்லப்படுகின்றனர். நாடுகள் குழப்பங்களுக்குள்ளும் வன்முறைகளுக்குள்ளும், பெரும் சனக்கூட்டம் மீதான சூட்டுத்தாக்குதல்களுக்குள்ளும், மத சமுதாயங்களை இலக்கு வைத்த

படுகொலைகளுக்குள்ளும்ரூபவ் பயங்கரவாத தாக்குதல்களுக்குள்ளும் மூழ்கியுள்ளதாக தலையங்கங்கள் அபாய அறிவிப்புச் செய்கின்றன.

இது வெட்கத்திற்குரியது. துரதிஸ்டவசமாக உலகத் தலைவர்கள் இந்த பொறுப்பினை பகிர்ந்து கொள்கின்றார்கள். ஏனையோர்கள் மீது விரலைச் சுட்டிக்காட்டி இந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொள்வதிலிருந்து நாம் விலகிவிட முடியாது. இந்த நாட்களிலே கோபத்தினால் முன் எடுப்பவைகள் முன்பு இருந்ததைக் காட்டிலும் பெரிய மேடையைக் கொண்டுள்ளனவாக உள்ளன.

நச்சு வன்மை பெருக்கெடுத்து ஓடுகிறது. இது அரபு யூத எதிர்ப்பாகவும் இஸ்லாம் எதிர்ப்பாகவும் கறுப்பின எதிர்ப்பாகவும் சுதேசிகள் எதிர்ப்பாகவும் ஆணாதிக்கமாகவும் சமபாலுறவு எதிர்ப்பாகவும் உள்ளது. இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இந்த வன்மம் அபாயகரமானது, வெறுப்பு நிறைந்தது. இழிவானது. இது வீறு பெற்று இணையத்தில் தொற்றாகி, உரிய பின்விளைவுகளுடன் உண்மை உலகத்திற்குள் கொட்டப்படுகிறது. இணையவழி தொந்தரவுகள், அனாமநேய கடிதங்கள், வணக்கஸ்தலங்களை உருக்குலைத்தல், வன்முறைச் செயற்பாடுகள் மற்றும் கொலை உள்ளடங்கலாக இவற்றை கனடாவிலும் நாம் காண்கிறோம். மொத்த குற்ற உணர்வுடன் வெறுப்பை நாம் கைவிடுவதற்கு நாம் தவறும்பொழுது அத்தகைய ஆட்களைநாம் வலுவூட்டுவதுடன் அவர்களின் வன்முறையையும் சட்டரீதியானதாக்குகிறோம்.

கடந்த ஆண்டுகளில், உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்களை இலக்கு வைத்த பயங்கரவாத தாக்குதல்களின் எண்ணிக்கையில் ஒரு அதிகரிப்பை நாம் கண்டுள்ளோம். ஆகவே குடும்பங்கள், மத நம்பிக்கையின் காரணமாக தாம் இலக்கு வைக்கப்படமாட்டோம் என, தமது பிள்ளைகள் அறியும் ஒரு இடம் என நம்பிரூபவ் எமது புதிய இடம் தமக்கு பாதுகாப்பை அளிக்கும் என மன்றாடி, அந்தக் குடும்பங்கள் கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் போன்ற ஜனநாயக நாடுகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

 கவலைக்குரியதாக, தமது சொந்த நாடுகளில் வன்முறையை விட்டோடிய அதே குடும்பங்கள் புதிய கரைகளை அடையும்பொழுது வன்முறையின் குடிவந்தோருக்கு எதிரான வெறுப்பு, வலதுசாரி தீவிரவாதம், வெள்ளை தேசியவாதம், நவநாசிச பயங்கரவாதம் என்பன போன்ற புதிய வகைகளை அதிகளவில் சந்திக்கின்றன.

லோரியர், டைபென்பேக்கர் மற்றும் எனது தந்தையாரின் தலைமைத்துவத்தின் கீழ் சிறுபான்மையினரின் பாதுகாப்பில் விற்பன்னரான, எமது பெரும் பலமாக பல்வகைமையை முன்னிறுத்திய தேசத்தில், கனடாவில் இந்த குழுக்கள் வசிக்கின்றன. திறந்த கைகளுடன் புதிதாக வருகை தருபவர்களை பெரும்பாலான எமது குடிமக்கள் வரவேற்கின்ற நிலையில், சிறிதளவு, நச்சுத் தன்மை கொண்ட பிரிவினர் இந்த பல்வகைத்தன்மை என்பது பலவீனம் என்ற நம்பிக்கையை விதைக்கின்றனர்.

இதிலுள்ள முரண்நகை என்னவெனில் டேயிஸ்ரூபவ் அல்-கைதாரூபவ் போக்கோ ஹராம் மற்றும் ஏனையோரை இகழ்வதாகக் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அதேவாறான வெறுப்பையே கக்குகின்றனர், வன்முறையைத் தூண்டுகின்றனர்ரூபவ் அப்பாவிகளின் கொலையையும் வன்முறையையும் தூண்டுகின்றனர். தாம் வெறுப்பதாக உரிமை கோருபவர்களை விட அவர்கள் சிறந்தவர்கள் இல்லை.

பிரச்சினை என்னவெனில் அரசியல்வாதிகள் வெறுப்பை போதியளவு கண்டிக்காதிருப்பதுடன், சில சமயங்களில் வெறுப்பு கருத்துக்களை தெரிவிப்போருக்கு அடைக்கலமும் அளிக்கின்றனர். நான் அரசியல்வாதிகளுக்கும், உலகத் தலைவர்களுக்கும் இதைத்தான் சொல்ல வேண்டும். சில தீவிரமான கருத்துக்களை உள்வாங்கச் செய்வதற்கு எளிதாக தெரிவு செய்யும் பிரித்தாளும் அரசியல் நிறுத்தப்படல் வேண்டும். இது வெறுமனே மக்கள் இறக்கிறார்கள் என்பதல்ல. மக்கள் கொல்லப்படுகிறார்கள். தாய்மாரும் தந்தையரும் தமது குடும்பங்களில் இருந்து பிரிக்கப்படுகின்றனர். அத்துடன் சுதந்திரமான அப்பாவி சிறுவர்கள் தயக்கம் எதவுமின்றி உடனடியாகச் சுட்டு வீழ்த்தப்படுகின்றனர்.

இது பள்ளிவாசல்களிலும், கோயில்களிலும் செபக்கூடங்களிலும் தேவாலயங்களிலும் பெரு நிகழ்ச்சிகளிலும் அங்காடிகளிலும் பாடசாலைகளிலும் இடம்பெறுகிறது. பலவீனமாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் இருக்கும் மக்கள், இங்கே கனடாவிலும், எல்லையின் தென் பகுதியிலும், உலகம் முழுவதிலும் கொல்லப்படுகின்றனர். இதற்கான எதிர்வினை எப்போதும் பொதுவானதாகவே உள்ளது. தலையங்கங்கள் முழங்கும்பொழுது நாம் திகிலுறுகின்றோம். தாய்மாரும் தந்தைமாரும் அவர்களுக்கு இது நடக்கவில்லையென கடவுளுக்கு நன்றி கூறி பிள்ளைகளை சிறிது இறுக்கமாக அணைத்துக்கொள்கின்றனர்.

அரசியல்வாதிகள் என்ற வகையில் நாம் எழுந்து நின்று அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம். அத்துடன் இதற்குப் பின்பு நாம் நல்ல விடயங்களைக் கூறுகின்றோம். எந்தவொரு சவாலுமற்றவர்களை வதைக்கும் அத்தகைய வெறுப்பினை இனிமேல் மீண்டும் அனுமதிக்க மாட்டோம் என நாம் கூறுகின்றோம். தீச்சுவாலைகள் அணைந்து, புகை அகன்றதன் பின்பு நாம் வேறு விதத்தில் பார்க்கின்றோம். நாம் மீண்டும் அரசியலுக்குத் திரும்பி ஒரு சொற்பம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்கு அந்த சக்தி வாய்ந்த கோபத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என ஆராய்கிறோம். இது ஆதாரத்தை செயற்படுத்துவதற்காக மற்றவரை நாம் பலிகடாவாக்குகின்றோம்.

கண் சிமிட்டுகை மற்றும் ஒரு இடித்தல் ஊடாக நாம் இந்த தீயசக்தியை சட்டபூர்வமாக்கிறோம். இந்த வெறுப்பினை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதற்கும்ரூபவ் இது சார்ந்த எமது விருப்பின்மையை வெளிப்படுத்தவும் நான் இன்று இங்கே எழந்து நிற்கின்றேன். தலைவர்கள் என்ற வகையில், அதிகாரம் மற்றம் மக்களை; கொண்ட சிறப்புரிமைக் கொண்ட சிலர் என்ற வகையில்ரூபவ் எதனையாவது செய்வதற்கான பொறுப்பு எமக்கு உள்ளது. இந்தப் பொறுப்பானது பேரம் பேசவது பற்றியதல்ல. அரசியல் ரீதியாக சௌகரியத்திற்காக புறந்தள்ளிவிட வேண்டியதுமல்ல. இந்த பார்வைகளுக்கு அடைக்கலம் அளிப்பதும் தவறான ஒரு தெரிவாகும். இந்த வெறுப்பை எமது கட்சிகளில் இருந்து கலைத்து விட வேண்டும். இணையத்தில் அதற்கு எதிராக போராட வேண்டும்.

பொதுக் கூட்டங்களில் இருந்து கலைத்து விட வேண்டும். எமது முன் கதவை அது வந்தடையும்பொழுது தள்ளிவிட வேண்டும். வெறுப்பு வெளிப்படும்போது அமைதியாக இருப்பதனை தெரிவு செய்வது, என்னைப் பொருத்த வரையில் மிகவும் கோழைத்தனமான ஒரு வடிவமாகும்.

ஆண்டாண்டுகளாக, பல தசாப்தங்களாக, இந்த நாட்டிலும், அந்த நாட்டிலும் அப்பாவி உயிர்களின் இழப்புக்காக நாம் துக்கம் கொண்டாடுகிறோம். சிறப்பாகச் செயற்படுவதற்கு உறுதியளிக்கின்றோம்.

ஆனால், அந்தச் சுழற்சி தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. வெறுப்பு என்பது தாம் பயன்படுத்தக்கூடிய உணர்வு எனவும்ரூபவ் தணியாக கோபம் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தமக்கு உதவும் எனவும் தலைவர்க்ள தீர்மானிக்கிறார்கள்.

சமூகம், உலகளாவிய சனசமூகம் மற்றும் மனிதன் என்ற வகையில், நாம் எதையும் கற்றுக்கொண்டோமா? உண்மையாகச் சொல்வதானால், எமது எண்ணங்களையும், பிரார்த்தனைகளையும் அனுப்புவதில் நான் களைப்படைந்து விட்டேன். நானே அவ்வாறு உணரும் போது, நாளாந்தம் வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு உணர்வார்கள் என எண்ணிப் பார்க்க முடிகின்றது.

உலகம் பூராகவுமுள்ள மக்கள் படுகொலைகளால் களைத்து போய்விட்டனர். தமது தலைவர்கள் கோட்பாடுசார் நிலைப்பாட்டினை எடுக்கத் திராணியின்மையால் தூண்டப்பட்ட இந்தத் துன்பியல்கள் தமது சனசமூகங்களைத் தாக்கும்பொழுது அவர்கள் ஆறுதலுக்காக நண்பர்களையும் அயலவர்களையும் நாடுகிறார்கள். மக்கள் விழிப்பு ஆராதனைக்காக நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் வருகை தந்து மன்றாடுகிறார்கள் ஆனால் எம்மால் அவற்றை நிவர்த்தி செய்ய முடிவதில்லை.

எமது தலைவர்கள் நிலையாக பின்தொடர தவறுகிறார்கள் என்பதற்கு எமது சனசமூகங்கள் ஒரு உதாரணத்தை முன்வைக்கின்றன. இவை போன்ற துன்பியல்களுக்கு பிற்பாடு அரசியல்வாதிகள் இது அரசியல் கதைப்பதற்கான நேரம் அல்ல, அதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட சனசமூகங்களுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டுமெனக் கூறுகின்றனர். இது கேலிக்குரிய விடயமாகும். அரசியல் கதைப்பதற்கான சரியான நேரம் இதுவென நான் நினைக்கின்றேன். ஏனெனில் மக்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய சிறந்த வழி என்னவெனில் அங்கேயொரு

பிரச்சினை இருக்கின்றது என்றும் அதனைத் தீர்ப்பதற்கு உருப்படியான நடவடிக்கை எடுப்பதினையும் ஏற்றுக்கொள்வதுமே சிறந்த வழியாகும். உலகளாவிய சமூகம் என்ற வகையில் எமக்கு ஒரு தெரிவு உள்ளது.

வன்முறையத் தூண்டுபவரை நோக்கி நடவடிக்கை எடுக்காத எமது தலைவர்களை நாம் கைவிடுவோமா? எதுவும் சொல்லாத நிலையில் இனவாதமாகவும், பெண்களுக்கு எதிராகவும் பகிடிகளைக் கூறும் எமது சகபாடிகளை நாம் கைவிடுவோமா?

அனாமநேயம் என்ற உரைக்கு கீழே வெறுப்பை பரப்பும் அவமானங்களை வீசும் இந்த கோழைத்தன இணைய தேவதைகளை நாம் கைவிட்டு விடுவோமா?

இறுதியில், நாம் சரியானவற்றைச் செய்வோமா? பிற்காலத்தில் எமது கைகளை அவற்றில் புதைத்து கொள்வதற்காக. இன்று எமது தலைகளை மண்ணிற்குள் புதைத்துக்கொள்வோமா? நியூசிலாந்தில் ஏற்பட்ட துன்பியலானது நாம் எவ்வளவுக்கு வழிதவறிப் போயுள்ளோம் என்பதற்கான மற்றுமொரு உதாரணமாகும். எவ்வாறாயினும் இந்த 50 இறப்புகளிலும் இருந்தான பாடங்களைக் கற்றுக்கொள்ளாமல் போகவிட முடியாது.

நாங்கள் செல்லும் பாதை ஆபத்தானதும் நிலைபேற்றதும் ஆகும். தமது தலைவர்களின் முழுமையான ஆதரவின்றி, இதற்காகத் தனியாகப் போராடி மக்கள் களைத்து விட்டார்கள். எவ்வாறாயினும், இங்கே நாம் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியும்; என்பதுடன் வெறுப்பை வளர்க்கும் மற்றும் பின்விளைவுகள் இல்லாத வன்முறைகளைத் தூண்டும் நாட்கள் வந்துவிட்டன என இவைகள் போதும் போதுமென கனடாவிலும் உலகம் பூராகவும் சொல்கின்றன.

கிறிஸ்ட்சேர்ச் மக்களுக்காக நாம் கடமைப்பட்டு இருக்கிறோம். செய்ன்ட்-பொய் பிட்ஸ்பேர்க் மற்றும் மென்செஸ்டர் மக்களுக்காக நாம் கடமைப்பட்டு இருக்கின்றோம். நாம் எமது சிறுவர்களுக்காக கடமைப்பட்டிருக்கிறோம். எமக்காக கடமைப்பட்டிருக்கிறோம்.

ஒத்த மனதுடைய நாடுகளை இந்தப் போராட்டத்தில் கனடாவுடன் நிற்குமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், யூதர்கள், கறுப்பு, வெள்ளை என நாம் அனைவரும் ஒரு அணியாக, புதிய நெறியாக இதனை ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கும் ஒரு அணியாக, ‘எண்ணங்களையும் பிரார்த்தகைளயும்’ அனுப்பி களைத்துப் போன ஒரு அணியான இந்த வெறுப்புக்கு எதிராகப் போராட வேண்டும். 

கனடாவில், ஏற்கனவே பாரபட்சத்தையும், வெறுப்புபினையும் எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான படிநிலைகளை எடுத்துள்ளோம். வெள்ளை உயர்சாதி மற்றும் நவநாசிசங்கள் உள்ளடங்கலாக வெறுப்பு பிரசாரத்தைப் பரப்பும் குழுக்கள் தொடர்பில் நாம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளோம். குறிப்பிடத்தக்க, துப்பாக்கி கட்டுப்பாட்டு மறுசீரமைப்புகளை நாம் அமுல்படுத்தியுள்ளோம். வழிபாட்டு இடங்களை நாம் பாதுகாப்பதற்கான நிதியினை நாம் அதிகரித்தள்ளோம். எவரையும் உள்ளடக்குதலை ஊக்குவிக்கும், மக்களுக்கு இடையில் தொடர்புகளை கட்டியெழுப்பும் மற்றும் எமது பல்வகைத்தன்மையை கொண்டாடும் நிகழ்ச்சிகளிலும் நாம் முதலீடு செய்துள்ளோம்.

இருந்த போதிலும், நாம் இன்னும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கின்றது என எமக்குத் தெரியும். ஆனால் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யப்போகிறோம் எனச் சொல்லும்பொழுது நீங்கள் அனைவரும் கேட்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்தச் செய்தியைத்தான் நாம் உலகத்திற்கு எடுத்துச்செல்லப் போகிறோம்.

உலகம் முழுவதும் உள்ள எமது பங்காளர்களுக்கு, இனவாதம் மற்றும் சகிப்புத்தன்மையின்மைக்கு எதிரான போராட்டமானது ஒரு பெரிய போராட்டமாக இருக்கும். ஆனால் நாம் அதனை இன்னும் பின் தள்ளிப்போட முடியாது. நாம் இங்கே ஒரு உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று எமக்குத் தெரியும். நாம் பக்கத்தைப் புரட்டி நாம் உள்ள அபாயகரமான பாதையில் இருந்து விலக முடியும். எமது சனசமூகங்களுக்கு உற்சாகமளிக்க வேண்டியது மாத்திரமே தேவையுள்ளது.

 உலகத்தில் கெட்டவர்களை விட அதிக நல்லவர்கள் இருக்கிறார்கள். வெளிச்சம் இருட்டை இல்லாமல் போகச் செய்கிறது. நல்லது தீயதை பெருமளவில் இல்லாது செய்கிறது. துன்பியல் சம்பவங்கள் இடம்பெறும் போது, விழிப்புணர்விற்காக எமது குடிமக்கள் வந்து கூடும்பொழுது நாம் இதனைக் காண்கிறோம். வழிபாட்டுத் தலங்களைப் பாதுகாப்பதற்கு கரங்களை அந்நியர்கள் இணைக்கும்பொழுது நாம் இதனைக் காண்கிறோம். பாதுகாப்பற்ற நிலைமைய உணர்வோருடன் கூட நடப்பதற்கு சம்மதம் தெரிவிக்கையில் நாம் இதனை காண்கிறோம். செய்ன்ட்- பொயில் நாம் இதனைக் கண்டோம்.  இப்பொழுது நியூசிலாந்தில் நாம் இதனைக் காண்கிறோம்.

இது ஒரு முக்கியமான போராட்டமாகும். நாம் சேவையாற்றும் நல்ல மக்களால் சரியான விடயத்தைச் செய்வதற்கு அவர்களால் முன்வைக்கப்பட்ட உதாரணத்தை பின்பற்றுமாறு எல்லா வகை அரசியல்வாதிகளிடமும் அழைப்பு விடுக்கின்றேன். இந்த வெறுப்பை நாம் எதிர்த்து போராட வேண்டும். ஒன்றாக எம்மால் இதனைச் செய்ய முடியும் என அவர் மேலும் உரையாற்றினார்.

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ