உளவுத்துறையும் உளவியல் யுத்தமும்!

திங்கள் ஏப்ரல் 08, 2019

ஏகாதிபத்தியம், ஆதிக்க அரசுக்கு எதிராக குரல் எழுப்ப, போராட, நீதி கேட்க நீங்கள் துணிந்து விட்டால் புலனாய்வு தந்திரங்களை கற்று கையாள பழகுங்கள்.

ஆதிக்க ஆட்சி சமூகத்தின் மிகப்பெரிய அடியாள் உளவுத்துறையே. உளவுத்துறையின் மிகப்பெரிய ஆயுதம் உளவியல் யுத்தம். உளவியல் யுத்தத்தின் ஆயுதங்கள் பணம், பதவி, புகழ், அதிகாரம், வசதி, வாய்ப்பு, ஆடம்பரம், போதை ஆகிய அடிமை மானுட உளவியல் கட்டமைப்புகள். மானுட உளவியலை கட்டுப்படுத்துவதன் வழி உலகின் அனைத்து சமூகங்களையும் தம் ஆட்சி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்ற உளவியல் சித்தாந்தங்களை ஓர் குறிப்பிட்ட சில ஆதிக்க சமூகங்கள் தம் ஆயுதமாக்கி வெற்றியும் கண்டு விட்டார்கள்.

எம் மண்ணுக்காக எம் மக்களுக்காக போராட வேண்டும் துணிவும் விருப்பமும் மட்டுமே எங்கள் இலட்சியத்தின் வெற்றியை பரிசளிப்பதில்லை.

விவேகம் அற்ற வீரியம் வீணானதுவே!

உலகில் எந்த இராணுவ புரட்சியும் இல்லாமல் உளவுத்துறை மூலம் மிகப்பெரிய தேசங்களை வென்றுவிடலாம்.. நிறுவி விடலாம்...

ஆயுதங்கள் இல்லாமல் பெரும் புரட்சியை நிகழ்த்தும் வல்லமை கொண்டதே புலனாய்வு திறமைகள். உளவுத்துறை யுக்திகள்.

நீங்கள் உண்ணும் உணவில் உங்கள் உற்றார்களே நஞ்சு வைப்பதே உளவு துறை..

உங்கள் உற்ற நண்பரை உங்கள் துரோகி ஆக்குவதே உளவு துறை... உங்கள் ஆயுதத்தை வைத்தே உங்களை அழிப்பதே உளவு துறை..

உங்கள் மருந்தை உங்களுக்கான விஷம் ஆக்குவதே உளவு துறை..

24 மணி நேரமும் நான் ஆபத்தில் உள்ளேன். நான் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, பழகும் நபர்கள் நண்பர்கள், கையாளும் பொருட்கள் உபகரணங்கள், அனைத்துமே எனக்கு எதிரானவை..

எதிரி என்னோடே உள்ளான்.. என் அழிவின் வெற்றிக்காய் எதிரி காத்திருக்கிறான்...

நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் எதிரியின் சூழ்ச்சி இருக்கும். இவை அனைத்தையும் முறியடித்து என் இலட்சியத்தை வெல்வதற்கான ..

ஆயத்தமும், பயிற்சியும் என்னிடம் உண்டு என்ற நிலை மட்டுமே எங்களை வெற்றியாளர்களாக இவ்வுலகின் முன்னே நிறுத்தும்..!

கோடி உளவியல் அடிமைகள் மத்தியில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம்.

விழிப்பாக இருங்கள்...

நன்றி: பாலசுந்தரம்