உன் அதிர்ஷ்ட்டம் சுவீடனில் பிறப்பெடுத்தாய் !

வியாழன் செப்டம்பர் 26, 2019

தங்கையே உன்னை 
தலைவணங்குகிறேன் 
சுயநலத்துக்காய்
சுற்றிக்கொண்டிருக்கும் 
இந்த பூமியை 
காப்பாற்ற நீகொண்ட 
முயற்ச்சி வீண்போகாது 
உலகத்தலைவர்களை 
நீகேட்ட கேள்வியில்
அவர்கள் முகம் 
தொங்கியதை 
நாம் கண்டோம் 
நீ துணிந்து 
போராடு 
போராடினால்தான் 
விடிவு கிடைக்குமென 
நாமும் போராடினோம் 
இயற்கையை 
அழித்தது போல்
எம் இருப்பையும் 
அழித்தார்கள்
நீமட்டும் தமிழ் 
ஈழத்தில் பிறந்து 
இப்போராட்டத்தை 
நடாத்தி 
இருந்தால் 
இசைப்பிரியாவின் 
வரிசையில் நீயும் 
இடம்பிடித்திருப்பாய் 
உன் அதிர்ஷ்ட்டம்
சுவீடனில் 
பிறப்பெடுத்தாய் 
முன்னேறு 
பாரதி கண்ட
புதுமைப்பெண் 
நீ இல்லை 
இப்பூமி தாயின் 
மறு வடிவம் நீ

றொப்