உங்கள் கைகடிகாரம் கழிப்பறையை விட எட்டு மடங்கு அழுக்கானது!!

வியாழன் ஜூன் 27, 2019

நாம் நமது வீடு சுற்றுபுறச்சூழல் ஆகியவற்றை சுத்தம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளோம் ஆனால் சில முக்கிய பொருட்களை சுத்தம் செய்வதை மறந்து விடுகின்றோம்.

இவை பக்டீரியாக்களின் இருப்பிடம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

உங்களில் எத்தனை பேர் தமது கைகடிகாரத்தை சுத்தம் செய்கின்றீர்கள்,அல்லது அதை சுத்தம் செய்யவேண்டிய தேவையை உணர்ந்துள்ளீர்கள். ஏனெனில் சற்று  யோசித்துப்பாருங்கள் காலைமுதல் மாலை வரை உங்களுடன் பயணிக்கும் ஒரு பொருள்தான் கைகடிகாரம்.

நீங்கள் உணவு உட்கொள்ளும் போதும், கழிவறையை பயன்படுத்தும் போதும்,தும்மும் போதும் பிற செயல்களில் ஈடுபடும் போது மிக அருகில் இருப்பது உங்கள் கடிகாரம் தான்.

நீங்கள் மாலையில் குளிக்கின்றீர்கள்,உடையை சுத்தம் செய்கின்றீர்கள் ஆனால் மீண்டும் மறுநாள் அதே கடிகாரத்தை உங்கள் கைகளில் கட்டிகொண்ட பயணிக்கின்றீர்கள்.

உங்கள் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் இது பக்டீரியாவின் இருப்பிடம் என்பதை நீங்கள் அறிகின்றீர்களா?

கைகடிகாரம் பற்றிய நிபுணர் டிக் வாட்ச்ஸின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி கழிப்பறையை விடவும் உங்களது கைகடிகாரம் ‘மூன்று மடங்கு அசுத்தமானது என்பதை உறுதி செய்துள்ளது.

இந்த  நிறுவனம் பத்து வகையான கடிகாரங்களை பரிசோதித்த போது  இதில் பாக்டீரியா இருப்பது கண்டிறியப்பட்டுள்ளது. இந்த முடிவுகள்  கைகடிகாரங்களில் ஒரு கழிப்பறையின் இருக்கை மற்றும் நீர்குழாயின் கைப்பிடியை விடவும் எட்டு மடங்கு அதிக பாக்டீரியாவைக் கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் தோலினால் ஆன கைகடிகாரங்கள் உலோகத்தை விட அதிக அழுக்கைக் கொண்டுள்ளன.

கைகடிகாரங்களின் சுத்தத்தை பேணுவதில் ஒப்பீட்டளவில் பெண்களின் வீதம் ஆண்களைவிடவும் குறைவாக உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இப்போது உங்கள் கடிகாரத்தை அன்றாடம்  சுத்தம் செய்யவேண்டியதன் அவசியத்தை உணர்கின்றீர்களா? நீரினால் பாதிப்படையாத கடிகாரங்கள் பாவனையில் உள்ளன எனவே உங்கள் ஆரோக்கியம் கருதி உங்கள் கடிகாரத்தை சுத்தம் செய்வதை முக்கியாமானதாக கருதுங்கள்.