ஊனம் இருப்பதாக கூறி பிச்சை எடுத்து 5 மாடி வீடு கட்டிய பெண்

புதன் அக்டோபர் 28, 2020

எகிப்து நாட்டை சேர்ந்த பெண் நபிஷா.தற்போது இவருக்கு வயது 57 இவர் கடந்த 30 வருடமாக பிச்சை எடுத்து வந்துள்ளார்.

தனது 27-வது வயதில் கணவரை பிரிந்த பின்னர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தியுள்ளார் நபிஷா.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நபீஷாவின் நடவடிக்கையில் சந்தேகம் வந்ததால் அந்நாட்டு போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.  

விசாரணையில் ஆச்சர்யப்படும் அளவிற்கு நபீஷாவின் கதை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனால் கை விடப்பட்ட பின்னர் 30 வருடமாக பிச்சை எடுத்து வைத்துள்ள பணத்தை வங்கியில் போட்டு வந்துள்ளார்.

தினமும் பிச்சை எடுக்கும் பணத்தை வங்கியில் டெப்பாசிட் செய்து வந்துள்ளார்.

அதன் மதிப்பு ரூ 1.5 கோடி என தெரியவந்துள்ளது.மேலும் 5 மாடி வீடு வைத்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதனை வாடகைக்கும் விட்டு சம்பாதித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.  

இருந்தாலும் தெருவில் பிச்சை எடுப்பதை அவர் கைவிடவில்லை என தெரிவித்துள்ளனர்.

நபிஷா கடந்த 10 ஆண்டுகளாக வீல்சேரில் அமர்ந்தே பிச்சை எடுத்து வந்துள்ளதாகவும் ஆனால் அவரது கால்கள் நல்ல நிலையில் உள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வீல்சேரில் அமர்ந்து பிச்சையெடுத்தால் வருமானம் நல்ல வருவதாகவும், ஒரு முறை காலில் ஏற்பட்ட காயத்தால் வீல்சேர் பயன்படுத்தி வந்ததும், அந்த சமயம் வருமானம் அதிகமாக கிட்டியதால் அப்படியே பிச்சை எடுப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.