உப்பாற்றில் படகு கவிழ்ந்து விபத்து.! ஒருவர் பலி, இருவரை காணவில்லை

ஞாயிறு டிசம்பர் 08, 2019

திருகோணமலை கிண்ணியா- உப்பாறு பகுதியில் கடும் கொந்தளிப்பு காரணமாக படகு கவி ழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காணாமல்போயுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உப்பாறு பிரதேசத்தில் மகாவலி கங்கையில் 05 பேர் பயணித்த படகு இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.இதன்போது இருவர் நீந்தி கரையை அடைந்ததுடன் ஒருவர் மூழ்கி பலியானார். காணாமல் போன இருவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்.