ஊரடங்கு தளர்த்தப்பட்டது!

வியாழன் மார்ச் 26, 2020

மேல் மாகாணம், புத்தளம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாணம் ஆகியவற்றை தவிர்ந்த நாட்டின் ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்று(26) காலை 06 மணிமுதல் மதியம் 12 மணி வரையில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருக்கும்.

அத்துடன், வடக்கு மாகாணத்திலும் புத்தளம் மாவட்டத்திலும் நாளை (27) காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மதியம் 12 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

எனினும், மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளது.