ஊரடங்குச் சட்டத்துக்குள் எப்படி இருக்கின்றது பிரான்ஸ்........

வியாழன் அக்டோபர் 22, 2020

பிரான்ஸ் நாட்டில் பரிஸ் பரிஸ் புறநகர் உள்ளடங்கிய Ile de France, ஏனைய 8 மாநகரங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின் போது 19300 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூன்று நாட்களில் நடத்தப்பட்ட காவல்துறையினரின் சோதனையின்போது 3019 பேர் தண்டிக்கப் பட்டுள்ளனர் .

தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடந்த மக்கள் அனைவருக்கும் உள்துறை அமைச்சர் Gerald Darmenin நன்றி தெரிவித்துள்ளார் .

கடந்த 17ம் திகதி சனிக்கிழமை முதல் அமுலிக்கு வந்த ஊரடங்கு உத்தரவை மதித்து மக்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

12 ஆயிரம் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஊரடங்கு உத்தரவு 4 வாரங்கள் அமுலில் இருக்கும்.

தினமும் இரவு 9 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவை முதல் தடவை மீறும் ஒருவருக்கு 135 யூரோ தண்டம் விதிக்கப்படும்.

அதே தவறை மூன்று தடவைகள் அவர் மேற்கொண்டால் அவருக்கு 3,750 யூரோ தண்டமும் 6 மாத சிறைத் தண்டனையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

மேலும் பல நகரங்களில் ஊரடங்கு

பிரான்சில் மேலும் சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் பிறப்பிக்கப்படவுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்துக் காணப்படும் இந்த நகரங்கள் அபாயவலயங்களாக அறிவிக்கப்பட்டு பின்னர் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Clermont Ferrand,Tours, Nantes ஆகிய நகரங்களே புதிதாக ஊரடங்கு உத்தரவுக்கு உள்ளாக்கப்படவுள்ளன.

  • பரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்